நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெங்களூர் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியில் தமிழக வீரர் நடராஜன் விளையாட வைக்கப்படாதது குறித்து அந்த அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் அவருக்கான வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா போன்ற வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்தனர். இருப்பினும் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று கூறப்படடு வந்தது. இந்த சூழ்நிலையில் எதற்காக நடராஜன் இன்னமும் விளையாட வைக்கப்படவில்லை என்பது குறித்து கேட்ட கேள்விக்கு அந்த அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் ரசிகர்கள் கோபப்பட செய்யும் அளவுக்கு பதில் ஒன்றை கூறி இருக்கிறார்.
அதாவது இது குறித்து அவர் கூறும் போது “தற்போது நமது அணியில் 12 நபர்கள் மட்டுமே விளையாடக்கூடிய ஒரு சூழல் உள்ளது. எனவே நடராஜன் எந்த இடத்தில் விளையாட வைப்பது என்று நீங்கள் கூறினால் அதற்கு சரியாக இருக்கும். அவரை எந்த இடத்தில் விளையாட வைப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும் அவர் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு வெளியே அமர வைக்கப்பட்டிருக்கிறார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் பெரும்பாலான பெரிய வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாதம் தேவையே இல்லாதது” என்று பேசி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் முகேஷ் குமார் விளையாடி வரும் இடத்திற்கு பதிலாக நடராஜனை தாராளமாக விளையாட வைக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எனது அடுத்த போட்டியில் ஆவது நடராஜன் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இருப்பினும் கிட்டத்தட்ட ஒரு சுற்று ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் அவருக்கு காயம் இன்னமும் குணமாகவில்லையா? என்கிற கேள்வி ரசிகர்கள் இடையே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

