நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகள் விரைவாக நடத்தி முடிக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்சரல் ஸ்டார்க் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் கடைசியாக டெல்லி மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டம் காரணமாகவே மீதமுள்ள போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் மீதமுள்ள போட்டிகள் இந்த மாதத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
எனவே இதுவரை 58 போட்டிகள் நடைபெற்று இருக்கும் நிலையில் மீதம் 14 போட்டிகள் மே 30ஆம் தேதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. எனவே மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சல் ஸ்டார்க் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு உடனடியாக திரும்பினார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் விரைவாக நடைபெற உள்ள நிலையில் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் வருகிற ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளதால் ஸ்டார்க் பங்கு பெறுவதில் சிக்கல் உள்ளது.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.. அவரே வெளியிட்ட மனதை உருக்கும் சோகமான பதிவு.. முழு விபரம்
அதாவது அந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஜூன் மாதத்தில் ஸ்டார் பயிற்சிகள் மேற்கொள்வார் என்பதால் மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து பிசிசிஐ கூறும் போது வெளிநாட்டு வீரர்களை இனி மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வற்புறுத்த மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. இதனால் ஸ்டார்க் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பாரா? அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தயாராவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

