தம்பிங்களா ஓவரா பண்ணாதீங்க.. முதல்ல இந்த பேப்பரை தூக்கி எறிங்க.. இதுக்கு பின்னாடி இருக்க உண்மை தெரியுமா? – டேல் ஸ்டெய்ன் அதிரடி

நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் பேப்பரை தூக்கி காட்டிக் கொண்டாடும் முறையை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்து விட்டு ஆரஞ்சு ஆர்மிக்காக என ஒரு பேப்பரில் எழுதி இருந்ததை தூக்கி காட்டினார். அந்த கொண்டாட்டம் தற்போது ஐபிஎல் தொடரில் பரவி வருகிறது.

- Advertisement -

சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் மற்றும் லக்னோ வீரர் ஆகாஷ் சிங் ஆகியோர் இந்த பேப்பர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு தற்போது பெரிய மதிப்பு எதுவும் கிடையாது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்போது “பேப்பரை தூக்கி ஓரமாக வைக்கும் காலம் வந்துவிட்டது. உண்மையில் இந்த பேப்பர் கொண்டாட்டம் ட்ரெண்டிங்கில் இல்லை. இன்னொரு உண்மை என்னவென்றால் இதற்கு முன்பும் இந்த வகையான கொண்டாட்டம் ட்ரெண்டிங்கில் இருந்ததில்லை” என்று கூறியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles