சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷல்.. எனது அதிரடி சூழ்நிலையை பொறுத்து அமையும்.. வெற்றிக்கு பின்னர் டேரில் மிச்சல் பேட்டி

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முக்கியமாக அமைந்த பட்சத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது சிஎஸ்கே. வெற்றிக்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார் சிஎஸ்கேவின் டேரில் மிச்சல்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி மைதானம் முதலில் பந்துவீச்சுக்க சாதகமாக அமைந்ததால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மிக விரைவாக ஆட்டமிழந்து வெளியேற, மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய ரியான் பாராக் மட்டும் ஆறுதல் அளித்தார்.

- Advertisement -

35 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 47 ரன்கள் குவித்தார். இவரோடு அருமையாக பாட்னர்ஷிப் அமைத்த ஜூரேல் 18 பந்துகள் 28 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் துரிதமான ரன்களை சேர்க்க ராஜஸ்தான் அணி 141 ரன்கள் குவித்தது. இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி விளையாடியது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்ராஜ் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன் ரேட்டை உயர்த்த அதிரடியாக விளையாடினர். ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களும், டாரில் மிச்சல் 13 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 22 ரன்களும், சிவம் டுபே 18 ரன்களும், சமீர் ரிஸ்வி 15 ரன்களும் குவித்தனர். இதனால் 18.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிச்சல் கூறும்போது
“மெதுவான இந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது. பவர் பிளேவில் நாங்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினோம். எங்களது சுழற் பந்து வீச்சாளர்களும் மிக அருமையாக செயல்பட்டனர்.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் குவித்தாலும் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் அவர்களை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அதிரடியாக விளையாடுவது பார்ட்னர்ஷிப்பையும் அணியின் சூழ்நிலையையும் பொறுத்து அமைகிறது. புதிய பந்து என்றால் விரைவாக விளையாடி ரன்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா ஆட்டம் எங்க கைய விட்டு போயிருக்கும்.. இதனால்தான் நான் மெதுவாக விளையாடினேன்.. வெற்றிக்கு பின்னர் ருத்ராஜ் பேட்டி

புதிய பந்து என்பதால்தான் நான் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கச் சென்றேன். இந்த மைதானத்தில் விளையாடுவது எப்போதுமே மகிழ்ச்சியை தரக்கூடியது. ஏனென்றால் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய அளவில் இருக்கும்” என்று கூறி இருக்கிறார். சிஎஸ்கே தனது அடுத்த மற்றும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அதன் சொந்த மைதானத்தில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles