சிஎஸ்கே ஆமை வேக ஆட்டம்.. தொடர்ந்து 5வது முறையாக பஞ்சாப் அணியிடம் தோல்வி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 49வது டி20 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி

- Advertisement -

சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆடுகளத்தில் பந்து பேட்டுக்கு மெதுவாக நின்று வரும் என்பதால் தைரியமாக பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் சென்னை அணி பவர் பிளேவரை மிக நன்றாக விளையாடியது என்று தான் சொல்ல வேண்டும். ஆறு ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்து இருந்த நிலையில், சோதனையே பிறகுதான் ஆரம்பித்தது. 24 பந்துகளில் 29 ரன்கள் குவித்த நிலையில் ரகானே வெளியேற, அதற்குப் பிறகு சென்னை அணியின் ரன் வேகமும் விக்கெட்டும் அப்படியே சரிய ஆரம்பித்தது.

- Advertisement -

முக்கிய திருப்புமுனையாக சிவம்தூபே சந்தித்த முதல் பந்திலையே வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய சமீர் ரிஸ்வி மிகவும் மெதுவாக விளையாடினார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற அதற்குப் பின்னர் மொயின் அலி 15 ரன்களும் எம்.எஸ். தோனி 14 ரன்களும் குவித்தனர்.

மறுமுனையில் போராடிக் கொண்டிருந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் மற்ற வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கினால் அவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. 48 பந்துகளை எதிர் கொண்ட ருத்ராஜ் ஐந்து பௌண்டரி இரண்டு சிக்சர்களுடன் 62 ரன்கள் குவித்தார். இறுதியாக சென்னை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 162 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் வரும் ஒரு கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே வின் ஆமை வேக ஆட்டத்தால் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர்கள் பிரார் மற்றும் ராகுல் சகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். பின்னர் இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடியது. இரண்டாவது பாதியில் ஆடுகளம் பேட்டிங்க்கு நல்ல சாதகமாக இருந்ததால் பஞ்சாப் அணி ஆரம்பத்தில் இருந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தது.

இதையும் படிங்க:18வது ஓவரில் தோனிக்கு வைக்கப்பட்ட செக்.. ஷாம் கரண் அபாரமான கேப்டன்சி.. சிறப்பாக பந்து வீசிய ராகுல் சகார்

அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதற்கு பிறகு களம் இறங்கிய ரூஸோ 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 43 ரன்கள் குவித்தார்.அதற்குப் பிறகு களமிறங்கிய சசாங் சிங் மற்றும் கேப்டன் ஷாம் கரன் ஆகியோர் நிலைத்து நின்று விட்டனர். சஷாந்க் சிங் 25 ரன்களும், சாம் கரண் 26 ரன்களும் குவித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் 2021ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக சென்னை அணி ஐந்தாவது முறையாக பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles