18வது ஓவரில் தோனிக்கு வைக்கப்பட்ட செக்.. ஷாம் கரண் அபாரமான கேப்டன்சி.. சிறப்பாக பந்து வீசிய ராகுல் சகார்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கேப்டன் சாம் கரணின் அபாரமான கேப்டன்சி வெளிப்பட்டது.

- Advertisement -

சிஎஸ்கேவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் தொடங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கேப்டன் ருத்ராஜ் ஆகியோர் களமிறங்கினார். பவர் பிளேவரை இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர்.

- Advertisement -

ஆறு ஓவர்கள் வரை 55 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்த சென்னை அணியை அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தினர். இந்த நிலையில் ரகானே 24 பந்துகளில் 29 ரன்கள் குவித்து வெளியேற, ரன் வேகத்தை உயர்த்த ஒன் டவுனில் களமிறங்கிய சிவம் துபே தான் சந்தித்த முதல் பந்தியிலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு களம் இறங்கிய சமீர் ரிஸ்வி 23 பந்துகளில் 21 ரன்கள் குவிக்க, சென்னை அணியின் ரன் வேகம் அப்படியே மட்டுப்பட்டது. அதற்குப் பிறகு களம் இறங்கிய மொயின் அலி 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்கள் குவிக்க தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் மட்டும் ஒரு முனையில் போராடிக் கொண்டிருந்தார்.

இதுவரை போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசிய லெக் ஸ்பின்னர் ராகுல் சகார் எம்.எஸ். தோனி களம் இறங்கியதும் 19 வது ஓவரை வீச வந்தார். ஏனெனில் எம் எஸ் தோனி லெக் ஸ்பின்னருக்கு சற்று தடுமாறுவார் என்று முன்பே கணிக்கப்பட்ட நிலையில், சாம் கரணின் அபாரமான கேப்டன்சி அந்த இடத்தில் வெளிப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே எம் எஸ் தோனிக்கு பதிலாக மொயின் அலி நான்காவது பந்தில் போல்டாகி வெளியேற, அந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

இதுவரை வேகப்பந்துவீச்சாளர்களை இறுதிக்கட்டத்தில் சிரமமின்றி எதிர்கொண்ட தோனி இப்போட்டியில் சுழற் பந்துவீச்சை கண்டதும் சற்று தடுமாறித்தான் போனார் என்று சொல்ல வேண்டும். அதேபோல பீல்டிங் செட்டப்பும் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக அற்புதமாக இருந்தது. இறுதி ஓவரை அர்ஸ்தீப் சிங் வீச, அந்த ஓவரிலும் 13 ரன்கள் மட்டுமே வந்தது.

இதையும் படிங்க:வெடி வெடிச்சு கொண்டாட தயாரா இருந்தோம்.. ரிங்கு சிங் மனம் உடைஞ்சு போயிட்டாரு- ரிங்கு சிங்கின் தந்தை பேட்டி

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. மேலும் இந்த ஆடுகளத்தில் பனிப்பொழிவும் குறைவாக இருப்பதால், சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles