அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிசிசிஐ என இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருவதற்கு முன்பாகவே தோனி குறித்து பல்வேறு யூகங்கள் வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு உண்மையான விளக்கத்தை சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறி இருக்கிறார்.
வயது மற்றும் காயத்தின் காரணமாக மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? அல்லது இல்லையா? என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கை பொருத்தே தனது முடிவு இருக்கும் என்று கூறினார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மகேந்திர சிங் தோனியை அன் கேப்ட்டு வீரர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியானது. அப்படி தோனியை அன் கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு கோடி ரூபாயை தக்க வைக்கும். இதனால் வேறொரு தரமான வீரரையும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காசி விஸ்வநாதன் இதன் உண்மையான தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “நாங்கள் மகேந்திர சிங் தோனி குறித்து எந்த கோரிக்கையையும் பிசிசிஐயிடம் வைக்கவில்லை. எங்களுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் அன் கேப்ட்டு பிளேயர் விதி மீண்டும் கொண்டுவரப்படலாம் என கிரிக்கெட் வாரியத் தரப்பில் இருந்து மட்டுமே வெளியே வந்தது.
இதையும் படிங்க:வீடியோ: எப்பா எவ்ளோ பெரிய 6.. டிராவிட் மகன் விளாசிய மிக பெரிய சிக்ஸ்.. ஆச்சரியத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் இதன் தகவல்களை விரைவில் அறிவிக்கும் “என்று கூறியிருக்கிறார். ஆனால் தோனி அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நிச்சயம் விளையாடுவார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் எனவே அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக தோனி விளையாடுவது முழுக்க முழுக்க அவரது கையில் மட்டுமே இருக்கும் என்பதால் அதுவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

