ஐபிஎல் 2024.. சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன்.. தரமா செட் ஆயிருக்கு.. இந்த தடவையும் கப் சிஎஸ்கேக்கு தான்.. முழு விபரம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வரும் 22ஆம் தேதி மோதுகின்றன. சென்னை அணியில் தோனியும் பெங்களூர் அணில் கோலியும் இருப்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கப் போகும் சென்னை வீரர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில், தொடரின் கடைசியில்தான் அணிக்கு கிடைப்பார் என்று தகவல்கள் வெளி வருகிறது.

- Advertisement -

மேலும் வங்காளதேச தொடரின் போது காயம் அடைந்த இலங்கை அணி வீரர் மதிசா பதிரானா முதல் ஒரு சில போட்டிகளில் கிடைக்க மாட்டார். மேலும் உடலில் ஏற்பட்ட கிராம்ப் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் விலகிய வங்காளதேச வீரர் முஸ்தபிர் ரகுமான் தற்போது சென்னை அணியில் இணைந்து இருப்பது கூடுதல் பலம்.

- Advertisement -

எனவே தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் கான்வேக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது உறுதியாக இருக்கிறது. மேலும் மூன்றாவது இடத்தில் ரகானே களம் இறங்குவார். அவரது பார்ம் பொறுத்து மாற்று வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.மேலும் நான்காவது இடத்தில் காயத்திலிருந்து தேறி இருக்கும் சிவம் தூபே விளையாடுவார்.

ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேரி மிட்சல் களம் இறங்குவார். முறையை ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் களம் இறங்குகிறார்கள். எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பொருத்தவரை ஆல் ரவுண்டர் சர்துல் தாகூர் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் களமிறங்கலாம்.

- Advertisement -

கடைசி இரு இடங்களில் இலங்கை அணியின் தீக்சானா மற்றும் முஸ்தபிகுர் ரகுமான் களம் இறங்குவார்கள். இதில் பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், தீக்ஷனா, தீபக்சகர், முஸ்தபிகுர் ரஹ்மான் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் ரச்சின் ரவிந்த்ரா இடது கை பகுதி நேர பந்துவீச்சாளர் என்பதால் அவரை வைத்து ஒரு சில ஓவர்கள் எம் எஸ் தோனியால் தள்ள முடியும்.

மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற அடிப்படையில் பிளேயிங் லெவன் அணியை களம் இறக்கலாம். முதல் சில போட்டிகளில் இந்த அணி களம் இறங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். காயம் அடைந்த வீரர்கள் வருகை தந்தால் அணியின் சில மாற்றங்கள் நடைபெறலாம். இதில் இந்திய அணியில் அறிமுகமாகாத இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரகானாவின் பார்மைப் பொருத்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். எனவே பெங்களூர் அணிக்கான போட்டியில் களமிறங்க போகும் உத்தேச சென்னை அணி:

எம் எஸ் தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, ருத்ராஜ் கெய்க்வாட், ரஹானே, சிவம் துபே, டாரி மிட்சல், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், தீபக்சாகர், தீக்ஷானா, முஸ்தபிகுர் ரஹ்மான்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles