என்ன பழக்கம்னா இது.. எங்ககிட்ட பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. ஆர்சிபி தோற்க வேண்டுதல் நடத்தும் சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் போட்டியில் கொல்கத்தா அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஏற்கனவே தோற்ற சன்ரைசர்ஸ் அணியுடன் இரண்டாவது பிளே ஆப் சுற்றில் மோதும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி கொல்கத்தா அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

- Advertisement -

இன்று நடைபெற உள்ள இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில், ஆர்சிபி அணி தோற்க வேண்டும் என்ற சிஎஸ்கே ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி லீக் போட்டிதான். அந்தப் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டனர்.

- Advertisement -

மேலும் போட்டி முடிந்த பிறகு ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்க சில நிமிடங்கள் தோனி காத்திருந்த பிறகு அவர்கள் வராததால்தான் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எவ்வளவு நேரம் ஆகியும் நின்று இருக்க வேண்டும் என்று தோனி மீது புகார் சுமத்தப்பட்டது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக பெங்களூர் அணி வீரர் விராட் கோலி கடந்த போட்டிகளைக் காட்டிலும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் ஆக்ரோஷமாகவே நடந்து கொண்டார். சென்னை வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, மைதானத்தில் அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி சப்தமே வரக்கூடாது என்பது போல சைகையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதுதான் சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்தை தூண்ட முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த சோகம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், பதினாறு வருடங்களாக தனது அணிக்காக 100 சதவீதம் உழைப்பை கொடுத்த விராட் கோலிக்காக பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினர்.

இதையும் படிங்க:அவர் என் கூட தமிழ்லதான் பேசுவார்.. என்னால புரிஞ்சுக்க முடியும் ஆனா பேச வராது.. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஆனால் அவர்களிடமே கோலி இதுபோன்ற செய்கையை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சற்று கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெங்களூர் அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைய வேண்டும் என்று வேண்டி வருகின்றனர். இன்றைய போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் பலமாகவே விளங்குவதால் இந்த இரண்டு அணிகளுக்கிடையே ஆன போட்டி நிச்சயம் அனல் பறக்கும் என்பது உறுதி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles