நான் டூப்ளசிஸ்கிட்ட சத்தியம் வாங்கி இருக்கேன்.. எங்களுக்கு எதிரா இதை பண்ண கூடாதுன்னு.. சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் பேட்டி

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் எந்த அணி ஜெய்க்கிறதோ அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் போட்டிக்கு முன்பாக ஆர்சிபி கேப்டன் டு பிளஸ்சிஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் சென்னை அணியில் விளையாடிய காலத்தில் இருந்தே ருத்ராஜூம், இவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி பல சாதனைகள் புரிந்துள்ளனர். தற்போது இரு வீரர்களும் தங்கள் அணிக்கு கேப்டனாகி தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய போது ருத்ராஜ் மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் ஏறக்குறைய ஒரே வீரன் அடித்து இருந்தார்கள். ஒரு ரன் வித்தியாசத்தில் மட்டுமே ருத்ராஜ் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். ஆர்சிபி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருவதாகவும் சென்னை மற்றும் பெங்களூர் அணிக்கு இடையேயான போட்டி மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் விரிவாக கூறும்போது
“நான் தொடக்கத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் கேப்டன் டூ ப்ளஸ்சிசை சந்தித்தபோது அவருக்கு முழங்கை வழி இருப்பதாகவும், இன்னும் குணம் ஆகவில்லை என்றும் கூறினார். நான் அவரிடம் நீங்கள் வழக்கமாக அடிக்கும் ஸ்கூப் ஷாட்டை விளையாட கூடாது என்று சத்தியம் வாங்கினேன்.

- Advertisement -

அவ்வாறு நீங்கள் அடிக்கவில்லை என்றால் உங்களுக்கு பீல்டர்களை உள்ளே வைப்பேன் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் அந்த திசையில் மட்டுமல்லாது அனைத்து திசைகளிலும் எங்களுக்கு எதிராக ஆடினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. மேலும் அவரது பழைய அணியான சிஎஸ்கே மீது சாப்ட் கார்னர் இருக்க வேண்டும்.மேலும் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணிக்கு கூட வர வாய்ப்புண்டு. ( நகைச்சுவையாக கூறுகிறார்)

இதையும் படிங்க: ஒவ்வொரு அணிக்கும் பும்ரா கிடைக்க மாட்டார்.. ரோகித் சர்மாவின் கருத்தை நான் ஏற்கிறேன்.. விராட் கோலி பேட்டி

இன்றைய சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு பேட்ஸ்மேன் ஆகவோ அல்லது ஒரு பவுலராகவோ நீங்கள் இருந்தால் கண்டிப்பாக பம்ப் ஆகி இருப்பீர்கள். இந்த சீசனில் பெங்களூரு அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles