ஒவ்வொரு அணிக்கும் பும்ரா கிடைக்க மாட்டார்.. ரோகித் சர்மாவின் கருத்தை நான் ஏற்கிறேன்.. விராட் கோலி பேட்டி

இன்று நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பு பேட்டி அளித்த விராட் கோலி ஐபிஎல்லின் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இப்போட்டி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை முதல் பாதி முற்றிலும் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாகவே இருந்தது. ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 200 ரன்களுக்கு மேல் அடித்து நொறுக்கினார்கள். அதிலும் கடந்த ஏழு, எட்டு வருடங்களாக ஐபிஎல் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இந்த ஆண்டு உடைந்தது.

- Advertisement -

மேலும் ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் ஒவ்வொரு அணியிலும் களமிறங்கக்கூடிய தொடக்கப் பேட்மேன்கள் 200 ஸ்ட்ரைக் கேட்டில் விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இந்த ஐபிஎல்லில் பல சாதனைகளை படைத்தனர்.

மேலும் இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு பேட்ஸ்மேன் பயமின்றி விளையாடினார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது. இதனால் ரோஹித் சர்மாவின் இம்பாக்ட் பிளேயர் விதியில் உடன்பாடு இல்லை என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். தற்போது அதனை விராட் கோலி ஏற்றுக்கொண்டு ரோஹித் சர்மாவின் கருத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது
“நான் ரோஹித் சர்மா கூறிய இம்பேக்ட் பிளேயர் விதி குறித்த கருத்துக்கு உடன்படுகிறேன். கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு அம்சம்தான். ஆனால் அதன் சமநிலையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு பந்திலும் பௌண்டரி அல்லது சிக்ஸர் செல்லும் என்று நினைக்கும் அளவுக்கு கிரிக்கெட் இருந்ததை இதுவரை நான் பார்த்ததில்லை. நாம் உயர்மட்ட தரமான கிரிக்கெட் விளையாடுகிறோம்.

இதையும் படிங்க:விராட் கோலிக்கு ஏன் தோனியின் மீது இவ்வளவு அன்பு.? ஆரம்ப காலத்தில் கோலிக்கு ஏற்பட்ட சறுக்கல்.. ரகசியம் உடைக்கும் கவாஸ்கர்

இதில் தனிப்பட்ட நபர் யாரும் ஆதிக்கம் செலுத்தும் படி இருக்கக் கூடாது. ஒவ்வொரு அணிக்கும் பும்ரா கிடைக்க மாட்டார். மேலே உள்ள பேட்ஸ்மேன்கள் 200 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடுவதற்கு காரணம் கீழே இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால்தான். இது சமநிலையை சீர்குலைத்து விட்டது என்று நம்புகிறேன். மக்களும் இது போல் தான் நினைக்கிறார்கள்”என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles