சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ருத்ராஜ் வெற்றிக்கான சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.
டாசை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. அதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ருத்துராஜ் 54 பந்துகளில் 98 ரன்களும், மிச்சல் 32 பந்துகளில் 52 ரன்களும், டுபே 20 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர்.
இதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்து வீசி ஹைதராபாத் அணியை 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். அபாரமாக பந்து வீசிய தேஷ் பாண்டே மூன்று ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் முஸ்தஃபிகுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளும் பத்திரானா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
எனவே இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“இதுபோன்ற ஈரமான ஆடுகளங்களில் விளையாடுவது மிகவும் கடினமானது. மேலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் எங்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்றாலும் மாறுவேடத்தில் வந்து வெற்றியை கொடுத்திருக்கிறது. எனக்கு காயம் எதுவும் இல்லை நான் தற்போது நன்றாக உணர்கிறேன்.
நான் இந்த போட்டியில் சதம் அடிப்பது குறித்து யோசிக்கவில்லை. அணி 220 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. கடைசியாக வெல்ல வேண்டிய நான்கு, ஐந்து போட்டியில் தோல்வி அடைந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். இந்த போட்டியில் நினைத்த ரன்களை அடிக்க முடியாத போது வருத்தத்தில் இருந்தேன். ஆனால் அதுவே தற்போது வெற்றிக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.
இம்பாக்ட் பிளேயர் விதியின் காரணத்தால் எப்போதும் 20 ரன்கள் அதிகமாக குவிக்க வேண்டும். பவர் பிளேவில் எல்லோரும் தற்போது சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கடந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை சரி செய்து இந்த போட்டியில் வலுவாக திரும்பி இருக்கிறோம். ஜடேஜா இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார்.
இது போன்ற கடினமான ஆடுகளத்தில் 22 ரன்கள் விட்டுக் கொடுப்பது என்பது கடினம். மேலும் வீரர்கள் அறையில் சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பது நான் ஆலோசிப்பது கிடையாது. அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே பின் இருக்கையில் அமர்ந்து அவர்களை வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

