இந்த பிரச்சினையால பஞ்சாப் டீம்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. என்ன மாதிரி நீங்க இருக்க கூடாது- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நடராஜன்

தமிழகத்தின் சேலத்தில் பிறந்து தற்போது ஐபிஎல் கிரிக்கெட் மூலம் நட்சத்திர பந்துவீச்சாளராக வளர்ந்திருப்பவர் நடராஜன். இவர் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

இவர் சமீபத்தில் பஞ்சாப் அணியில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரரான நடராஜன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்று பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அதன் பிறகு தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தனது சிறந்த பந்துவீச்சு மூலமாக இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி தனது முத்திரையை பதித்தார். அதன் பிறகு தற்போது ஐபிஎல் கிரிக்கெட் மட்டும் விளையாடி வரும் நடராஜன் பஞ்சாப் அணியில் மொழி பிரச்சனையில் தான் எதிர் கொண்ட சிரமங்கள் குறித்து பேசி இருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பங்கேற்ற நடராஜன் மாணவர்களுக்கு இந்தி மொழியும் அவசியம் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்த ஒரு விரிவாக கூறும்பொழுது “நான் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது இந்தி தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. பஞ்சாப் அணியில் இருந்த தமிழக பயிற்சியாளர் ஸ்ரீதர் மட்டுமே எனக்கு உதவினார். மேலும் சேவாக் எனக்கு நிறைய ஆதரவு தந்தார். எனவே இந்தி மொழியும் அவசியம். ஆனால் அதற்கு முன்னால் முதலில் உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள்.

- Advertisement -

தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைத்தால் நிச்சயம் உங்களால் முடியாது. சாதாரண ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்றால் உங்களாலும் நிச்சயம் முடியும். ஆனால் எந்த இடத்திற்கு வந்தாலும் நாம் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது. உடை வேண்டுமானால் மாறலாம் அது நாம் செல்லும் இடங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்வது அவசியம். ஆனால் உள்ளத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளக் கூடாது.

இதையும் படிங்க:பிசிசிஐ அறிவித்த 125 கோடி பரிசுத்தொகை.. அடேங்கப்பா. ஒவ்வொரு வீரருக்கும் இவ்வளவா.. வியப்பில் கிரிக்கெட் உலகம்

எனவே மாணவர்களாகிய நீங்கள் அனைத்து மொழியும் கற்றுக்கொண்டு உங்கள் திறமையை இந்த உலகிற்கு வெளி காட்ட வேண்டும். இந்த குணத்தை கல்லூரி பருவத்திலேயே வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் கடந்து வந்த பாதையை மட்டும் மறக்கக்கூடாது என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று நடராஜன் கூறியிருக்கிறார். தனது சிறந்த பந்து வீச்சு மூலம் வரும் காலங்களில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles