இந்திய அணி பல ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற அதற்கு இந்திய மக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு மும்பையில் அளிக்கப்பட்டது.
அது தவிர இந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சிகளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையை அறிவித்தது.
தற்போது யார் யாருக்கு எவ்வளவு தொகை போய் சேரும் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இந்திய அணி பல வருட காத்திருப்புக்கு விடை கொடுக்கும் விதமாக ரோகித் சர்மா தலைமையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களும் தற்போது இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தது. இதன்பிறகு இந்திய அணி பரிசுத்தொகையை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் மேலும் 125 கோடி ரூபாய் அறிவித்திருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வாரியம் தனது அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகையை அறிவித்ததில்லை.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி இந்திய அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 கோடி ரூபாயும், பயிற்சியாளர் டிராவிட்டுக்கு 2.5 கோடி ரூபாயும், துணை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் என ஒவ்வொருவருக்கும் 2.5 கோடி ரூபாயும், இவர்களைத் தவிர ட்ரெயினர், பிசியோதெரபிஸ்ட் போன்றவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், மேலும் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்த நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அப்போது விளையாடிய இந்திய அணி வீரர்களுக்கு 80 லட்சமும், யுவராஜ் சிங் மட்டும் தனியாக ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. தற்போது அதைவிட ஐந்து மடங்கு உயர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க:தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு நேர்ந்த கதி.. மேலும் இரண்டு வீரர்கள் பாதிப்பு.. சோகத்தில் தமிழக ரசிகர்கள்
அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ தலைவர் ஆன ஜெயிஷா டி20 உலக கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், இனி வரவுள்ள சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதற்கும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று அவரை அறிவித்திருக்கிறார்.

