தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு நேர்ந்த கதி.. மேலும் இரண்டு வீரர்கள் பாதிப்பு.. சோகத்தில் தமிழக ரசிகர்கள்

ஜிம்பாப்வே தேர்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து டி20 போட்டிகள் விளையாடும் இந்திய அணி முதல் போட்டியில் எதிர்பாராமல் தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு பெற்றபோதும் ஒரு பந்து கூட விளையாடவில்லை. இருப்பினும் மூன்றாவது போட்டியில் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இளம் இந்திய அணி கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருக்கிறது. ஐபிஎல்லில் கலக்கிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் போன்ற வீரர்கள் இந்தத் தொடரில் இடம் பெற்றிருந்தாலும் முதல் போட்டியில் அனுபவ ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வியடைந்து இந்திய அணி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக முதல் போட்டியில் இடம் பெற்றிருந்த கலீல் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டார். இருப்பினும் இரண்டாவது போட்டியில் அபிஷேக் ஷர்மா, ருத்ராஜ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 234 ரன்கள் குவித்தது. இதனால் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு பெற்ற போதும் சாய் சுதர்சனுக்கு விளையாட வாய்ப்பு இல்லை.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டிக்கான தேர்வில் சாய் சுதர்ஷன், ஹர்சித்ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களை இந்திய நிர்வாகம் நீக்கி இருக்கிறது. காரணம் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கு பெற்ற சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் தூபே ஆகியோர் ஏற்கனவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தார்கள். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ்ல் ஏற்பட்ட புயல் காரணமாக அவர்களால் குறித்த நேரத்தில் இந்தியாவுக்கு வர முடியாததால் அந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஸ் சர்மா மற்றும் ஹர்சித்ராணா ஆகிய மூன்று வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் உலக கோப்பையில் இடம் பெற்றிருந்த மூன்று வீரர்களும் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றதை அடுத்து மீண்டும் இந்த மூன்று வீரர்களும் நீக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக சாய் சுதர்சன் நீக்கப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களிடையே அதுவும் குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:காதலி சொன்னதுக்காக இப்படியா பண்றது.. எல்லை மீறிய ஜிம்பாப்வே வீரர்.. ரசிகர்கள் கண்டனம்

இந்த சூழ்நிலையில் இடது கை ஆட்டக்காரரான சிவம் தூபேவிற்கு பதிலாக சாய் தர்ஷன் நிச்சயமாக அணியில் இடம் பெறலாம் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles