காதலி சொன்னதுக்காக இப்படியா பண்றது.. எல்லை மீறிய ஜிம்பாப்வே வீரர்.. ரசிகர்கள் கண்டனம்

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணி வீரர் லுக் ஜாங்வே துருவ் ஜூரேலின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவர் நடந்து கொண்ட விதம் இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி விளையாடி வரும் வேளையில் முதல் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது. இதன் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வெற்றி இலக்காக இந்திய அணிக்கு 116 ரன்களை நிர்ணயித்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு களம் இறங்கி விளையாடிய இந்திய அணி ஜிம்பாப்வே நிர்ணயத்த ரன்களை அடைய முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது இந்திய அணி பேட்ஸ்மேன் ஜுரேல் ஆறு ரன்களில் ஆட்டம் இழந்து லுக் ஜான்வேவின் பந்துவீச்சில் வெளியேறினார். ஆட்டத்தின் பத்தாவது ஓவரை வீசிய ஜான்வே ஜூரலின் விக்கட்டை வீழ்த்தியதும் தனது காலில் இருந்த ஷூவை கழட்டி போன் பேசுவது போல சைகையை வெளிப்படுத்தினார்.

இது அவமரியாதை செய்யும் விதமாக தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த ஜான்வே “போட்டிக்கு முன்தினம் தனது காதலியுடன் போனில் பேசியதாகவும், நான் விக்கெட் வீழ்த்தினால் இதுபோன்று செய்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தனது காதலி கூறி இருந்ததாக கூறி இருக்கிறார். இதனால் அவர் சொன்னதற்காகவே நான் இப்படி செய்தேன் ” என கூறியுள்ளார்.

- Advertisement -

தனது காதலை சொன்னதற்காகவே இவ்வாறு வெளிப்படுத்தினேன் என்று அவர் கூறினாலும், அனைவரின் மத்தியில் ஒரு வீரரை அவமதிக்கும் வகையில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று இந்திய ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்க வீரர் ஷம்சி இதுபோன்ற செய்கையை காட்டி சிக்கலில் மாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:என்னோட செஞ்சுரிய பாத்தீங்க… நான் யாரோட பேட்ல ஆடுனேன்னு பாக்கலையே…! – பேட்டின் ரகசியம் சொன்ன அபிஷேக் சர்மா!

இருப்பினும் இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாங்கள் சாம்பியன் அணி தான் என்று ஜிம்பாப்பை அணிக்கு உணர்த்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி வருகிற புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் தொடங்க உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles