என்னோட செஞ்சுரிய பாத்தீங்க… நான் யாரோட பேட்ல ஆடுனேன்னு பாக்கலையே…! – பேட்டின் ரகசியம் சொன்ன அபிஷேக் சர்மா!

“எனக்கு எப்போதெல்லாம் அழுத்தமான சூழ்நிலை வருகிறதோ அந்த நேரத்தில் நான் ஷுப்மன் கில் பேட்டை எடுத்துச் சென்று விளையாடுவேன்.” என்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20-ல் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்று டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, தொடரின் முதல் டி20 போட்டியில் 115 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கியது.

- Advertisement -

இந்திய அணிக்கு அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 47 பந்துகளில் சதம் விலாசி பல்வேறு சாதனைகளை படைத்து ஆட்டமிழந்தார். இவருக்கு பக்க பலமாக விளையாடி வந்த ருத்துராஜ் 77 ரன்கள், ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் விளாச, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மேலும் ஜிம்பாப்வே அணியை 134 ரன்களுக்கு ஆள் அவுட் செய்ததுடன் 100 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்த காரணத்தினால் பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாடிய சர்மா, அங்கும் ஓபனிங்கில் வெளுத்துவாங்கியதால் சர்வதேச கிரிக்கெட் வாய்ப்புகள் கிடைத்து , இங்கும் தக்க தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து போட்டி முடிந்த பிறகு பகிர்ந்து கொண்ட அபிஷேக் சர்மா கூறுகையில்,

- Advertisement -

“இந்த தருணத்திற்காக தான் இத்தனை வருடங்கள் போராடி வந்தேன். முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தபோது மனதிற்கு மிகுந்த வலியை கொடுத்தது. கட்டாயம் இந்த போட்டியில் எனது ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற முழுமுனைப்புடன் களமிறங்கினேன்.

எப்போதெல்லாம் எனக்கு அழுத்தமான சூழ்நிலை வருகிறதோ, அந்த சமயத்தில் ஷுப்மன் கில் பேட்டை வாங்கிக்கொண்டு உள்ளே களமிறங்குவேன். இது இப்போது அல்ல, அண்டர்-14 காலத்திலிருந்து எனக்கும் அவருக்கும் இடையே இந்த பந்தம் தொடர்கிறது. மேலும் எனக்கு கிரிக்கெட்டிலும் அதற்கு வெளியேயும் பல்வேறு தருணங்களில் ஆலோசகராகவும் வழிநடத்துபவராகவும் இருந்து வரும் யுவராஜ் சிங் அண்ணனை இந்த தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.” என்று பேட்டி அளித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே அவருக்கு வீடியோ கால் செய்து அவரிடம் ஆசியும் பெற்றார் அபிஷேக் சர்மா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles