பும்ரா இந்திய அணியின் பொக்கிஷம்.. அவர் செய்ததை யாராலும் ஈடு செய்ய முடியாது.. கேஎல் ராகுல் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதில் கடைசி போட்டி கனடா அணிக்கு எதிராக நடைபெறும் நிலையில் இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக பந்துவீச்சாளர் பும்ரா விளங்குகிறார். இவர் ஒரு இந்திய அணியின் பொக்கிஷம் என்று சக கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் பும்ராவின் செயல்பாடு மிக அற்புதமாக இருந்து வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் இரண்டு விக்கெட், மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் மூன்று விக்கெட் என்று இந்திய அணி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நேரங்களில் எல்லாம் காப்பாளனாக விளங்கி இந்திய அணியை மீட்டெடுக்கிறார்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு இவர் இல்லாமல் உலகக்கோப்பை விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை பும்ரா அபாரமாகவே செயல்பட்டார். இடையில் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத பும்ரா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

தற்போது அதே உத்வேகத்துடன் டி20 உலக கோப்பையிலும் களமிறங்கி இந்த முறை இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் குறித்து இந்திய அணியின் சக கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல் பும்ரா ஒரு இந்திய அணியின் பொக்கிஷம் என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். மேலும் இவர் செய்த சாதனைகள் ஏராளம் எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா குறித்து கே எல் ராகுல் விரிவாக கூறும்பொழுது
“பும்ரா ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர். தேசிய கிரிக்கெட் அணியின் பொக்கிஷமாக விளங்குகிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகள் நீண்ட காலமானாலும் உலக கிரிக்கெட்டில் யாரும் அவ்வளவு எளிதில் அதை ஈடு செய்ய முடியாது. அந்த அளவிற்கு அவர் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர்” என்ற புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:பும்ராவால் நிச்சயமாக இது முடியாது என்று நினைத்தேன்.. ஆனால் நான் நினைத்தது தவறு என்று உணர்த்திவிட்டார்.. கபில்தேவ் பேட்டி

தான் டி20 உலக கோப்பையில் தேர்வாகவில்லை என்றாலும், அதில் செயல்படும் வீரர்களை உற்று கவனித்து, பாராட்டிப் பேசி வரும் கே.எல். ராகுலை கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். தான் தேர்வு செய்யப்படவில்லை என்றால் உலக கோப்பையை நான் பார்க்க மாட்டேன் என்று கூறும் ரியான் பராக் போன்ற இளம் வீரர்களுக்கு மத்தியில், கேஎல் ராகுலின் இந்த பண்பு அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles