6.4 லட்சத்திற்கான கிரிக்கெட் கேள்வி…….பதில் தெரிந்தால் உடனே இதை செய்யுங்கள் …..

பழம்பெரும் இந்திய நடிகர் அமிதாப் பச்சன் வினாடி வினா நிகழ்ச்சியான கவுன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று பல லட்சங்களையும் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் சமீபத்தில் வெளியான எபிசோடில், பச்சன் கிரிக்கெட் தொடர்பான போட்டியாளரிடம் இந்திய மதிப்பிலான 6.4 லட்சத்துக்குரிய கேள்வியைக் கேட்டார்.

- Advertisement -

6.4 லட்சம் கேள்வி:

6.4 லட்சம் கேள்வியானது; 2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி எது?

- Advertisement -

இதற்காக நான்கு பதில்களும் கொடுக்கப்பட்டது (இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து).இங்கிலாந்து என்பதே இதற்கான சரியான பதில்.

- Advertisement -

டிசம்பர் 1, 2022 அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் வழிகாட்டுதலின் பேரில் இங்கிலாந்து அணி முதல் நாளில் 506/4 ரன்களை எடுத்திருந்தது.

அன்று இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ என்ற யுக்தியை கையில் எடுத்திருந்தது. ‘பாஸ்பால்’ என்றால் தோல்வியை பற்றி யோசிக்காமல் அதிரடியாக ஆட வேண்டும்.எந்த ஒரு டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளிலும் 500 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது. அந்த தொடரையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்று பிரபலமானது இங்கிலாந்து அணி.

- Advertisement -

போட்டியாளர் கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னார்.

‘பாஸ்பால்’ அணுகுமுறையை கையில் எடுத்த தோனி:

மேலும் சமீபத்தில், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ‘பாஸ்பால்’ அணுகு முறையை கையில் எடுத்ததால் கடந்த சில ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியும் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல விக்கெட் கீப்பர் ஒருவர் பேசியதாவது,“என்னை பொறுத்தவரை இப்பொழுது கிரிக்கெட் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் மக்கள் கிரிக்கெட்டை பார்க்கும் கண்ணோட்டம் வித்தியாசமானது. இப்பொழுது ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் T20 போன்று வீரர்கள் அதிரடி காட்டத் தொடங்கி விட்டார்கள்” என்று பிரபல விக்கெட் கீப்பர் ஒரு விளம்பர நிகழ்வில் கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles