நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து துவண்டு போயிருந்த நிலையில், மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் ஆர்சிபி அணியின் கேப்டனான டுப்ளசிஸ் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியை விட்டு விலகி அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கேப்டனாக பதவி ஏற்றார். பின்னர் அவர்கள் தலைமையில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளை வெற்றி பெற்ற நிலையில், டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்தது.
மீண்டும் ஐந்தாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருந்த வேளையில், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில மாற்றங்களை செய்தது. பின்னர் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கேவின் சமூக வலைதளத்தில் 2020ஆம் ஆண்டு ருத்ராஜ் கொல்கத்தா அணிக்கு எதிராக 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்ததை நினைவு கூர்ந்து, ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தது.
பின்னர் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் பாப் டு பிளஸ்சிஸ் 2021ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து சென்னை அணி நான்காவது பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருப்பார்.
இதனை நினைவுபடுத்தும் விதமாக டு பிளஸ்சிஸ் அதில் தனது கருத்தினை பதிவிட, அதில் சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் நிச்சயமாக அதில் நீங்கள் விளையாடியதை யாராலும் மறக்க முடியாது என்று ஒப்புக்கொண்டார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:3 ரன்னை தாண்டாத 5 பேர்.. ஒரே ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. ஜடேஜாவின் சுழலில் சிக்கிய கொல்கத்தா.. சென்னை அணி சிறப்பான வெற்றி
இந்த நிலையில் பெங்களூர் அணி ரசிகர்கள் ஆர்சிபி அணி விளையாடி 5 போட்டிகளில் நான்கில் தோல்வி பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கேப்டன் அதனைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல், அவருக்கு சென்னை அணியின் மீதே அவரது ஆர்வம் இருக்கிறது. அதனால் இவரை ஆர்சிபி இன் கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று காட்டமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Bro wasn't even mentioned in the post 😭 my man's forever a yellove by heart 💛 pic.twitter.com/pUhIlnmAEH
— Heisenberg ☢ (@internetumpire) April 8, 2024

