பிரசித் கிருஷ்ணா இருக்கட்டும்.. தேவையில்லாத ஆணி தாக்கூருக்கு பதில் இவரை ஆட வையுங்கள் – ஶ்ரீகாந்த் அறிவுரை.. !

இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை கேப்டவுன் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. புதிய பிளானுடன் இரண்டாவது போட்டியைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. பும்ரா மட்டுமே கட்டுபடுத்தி பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் சிராஜ் ஓரளவு சமாளித்தார். மறுபக்கம் தாக்கூர் – கிருஷ்ணா கூட்டணியைப் பயன்படுத்தி தென்னாபிரிக்கா அவர்களது அழுத்தத்தை போக்கிக் கொண்டனர்.

- Advertisement -

ஷமி அணியில் இல்லாதது பெரிய பின்னடைவு. அவருக்கு பதிலாக சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஆவேஷ் கானை இரண்டாவது போட்டிக்காக அணியில் சேர்த்துள்ளனர். நாளை நடக்கவிருக்கும் போட்டியில் அதிரடியான இரு மாற்றங்கள் வேண்டுமென வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

- Advertisement -

நம் முன்னாள் தமிழக வீரர் மற்றும் வல்லுநர் ஶ்ரீகாந்த் அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ 2வது டெஸ்ட் போட்டியில் தாக்கூருக்கு பதிலாக அஷ்வின் தான் ஆட வேண்டும். நான் கேப்டனாக இருந்தால் அதைத் தான் செய்து இருப்பேன். ஸ்பின்னர்கள் 5 விக்கெட் எடுப்பது கஷ்டம் தான், ஆனால் நிச்சயம் 2 – 3 விக்கெட்டுகள் எடுத்து அணிக்கு உதவுவார்கள். ”

“ ஜடேஜா – அஷ்வின் கொடுக்கும் அழுத்தத்தை வைத்து வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கலாம். பிரசித் கிருஷ்ணாவை ஒரு போட்டியோடு நீக்குவது தவறு. இன்னொரு போட்டியில் அவர் கண்டிப்பாக ஆட வேண்டும். அணியில் தேவையில்லாமல் இருப்பவர் தாக்கூர் ஒருவர் தான். ” என்றார்.

- Advertisement -

ரோஹித் ஷர்மா – ராகுல் டிராவிட் இவ்வாறு யோசிக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. தாக்கூர் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 24 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய போது ஓரளவு தாக்குப்பிடித்து நின்றார். அவரது கூடுதல் பேட்டிங் ரன்களைக் கருத்தில் கொண்டு அவரை அணியில் தொடர்வார்கள் எனத் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles