தோனி.. தோனி.. சிஎஸ்கே..சிஎஸ்கே.. அதிர்ந்த கல்லூரி மைதானம்.! திகைத்துப் போன சிவம் தூபே…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான சிவம் துபே, தமிழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட போது அங்கு மாணவர்கள் செய்த செயலைப் பார்த்து திகைத்து போனார்.

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. இத்தொடருக்காக முக்கிய வீரர்கள் தவிர்த்து எஞ்சிய வீரர்கள் தற்போது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

சென்னை அணியைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி இன்னும் சிறிது நாட்களில் சென்னையில் தனது பயிற்சியைத் தொடங்க உள்ளார். அவரைத் தொடர்ந்து கெயிக்வாட் மற்றும் ரகானே ஆகியோர் தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். சென்னை அணியின் முக்கிய வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ள நிலையில், அது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது டெவான் கான்வே மற்றும் ரட்ச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்தனர். இக்காயம் தற்போது பெரிதாக இல்லாத நிலையில் அவர்கள் இருவரும் அணிக்கு விரைவில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்திய வீரர் சிவம் துபே ரஞ்சி டிராபியில் அசாம் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார்.

எனவே அவரது உடற்தகுதியை சென்னை அணி நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வரும் வேளையில், சமீபத்தில் வேலூரில் உள்ள விஐடி கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசத் துவங்கும் போது அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் தோனியின் பெயரையும், சிஎஸ்கே அணியின் பெயரையும் கூச்சலிட அங்கிருந்த கல்லூரி மைதானமே அதிர்ந்தது.

- Advertisement -

இதனால் சில வினாடிகள் பேசாமல் அமைதி காத்த சிவம் தூபே பிறகு “மாணவர்களிடம் உங்களின் ஆதரவுக்கு நன்றி. இதனை நிச்சயம் சென்னை அணியிடம் தெரிவிப்பேன்” என்று கூறினார். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.

2005ஆம் ஆண்டு முதன் முதலில் கிரிக்கெட் விளையாட வந்த தோனிக்கு அப்போதைய 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் அனைவரும் மிகத் தீவிர ரசிகர்களாக இருக்கும் வேளையில், தற்போதைய 2k கிட்ஸ்களான கல்லூரி மாணவர்களும் ரசிகர்களாக இருப்பது அவரின் தலைமுறை கடந்த ரசிகர்களின் அன்பினைக் குறிக்கிறது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ள சென்னை அணி, தோனி ஓய்வு பெறப் போகும் கடைசி சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles