17 வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன. சென்னை அணியின் பேட்டிங்கின் இறுதியில் மகேந்திர சிங் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் இப்போட்டியை மிகவும் சுவாரசியமாக மாற்றி உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் வழக்கத்திற்கு மாறாக சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரவீந்திரா மற்றும் ரகானே ஆகியோர் களமிறங்கினார். ரகானேவிற்கு மும்பை மைதானம் மிகவும் பழக்கமானது என்பதால் இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார்.
ஆனால் களம் இறக்கப்பட்டதற்கு ஏற்ப ரகானே சிறப்பாக விளையாடவில்லை. எட்டு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் கோட்சேவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரட்சின் ரவீந்திரா 21 ரன்களில் ஆட்டம் இழக்க, ஒன் டவுனில் களமிறங்கிய அணியின் கேப்டன் ருத்ராஜ் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
இவருடன் மற்றொரு ஆல் ரவுண்டரான சிவம் தூபே பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ருத்ராஜ் தனது பேட்டிங் ஃபாரமை சிறப்பாக மீட்டெடுத்தார். அவர் அடித்த ஒரு சில சிக்சர்கள் அவரின் பேட்டிங் தரத்தை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தியது. 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
பிறகு சிவம் தூபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க, மறுமுனையில் விளையாடிய டாரி மிச்சல் ரன் வேகத்தை சற்று குறைப்பது போல் தோன்றியது. 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 186 என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை விளாசி ரசிகர்களை குஷ்படுத்தினார். முதல் பந்தினை ஸ்ட்ரெயிட்டாக ஒரு சிக்ஸரும், இரண்டாவது பந்தினை டீப் மிட் விக்கெட் சைடில் ஒரு சிக்ஸரும், மூன்றாவதாக புல்டாசாக வீசிய பந்தை லெக் சைடில் ஒரு சிக்ஸர் விளாசினார்.
இதையும் படிங்க:தோனி தனது பிளானை மாற்றிக் கொண்டார்.. இனி அவர் விளையாடுவது கடினம்தான்.. கூறுகிறார் இர்பான் பதான்
நான்கு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தோனி 20 ரன்கள் குவித்து சென்னையின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடுகிறது.
DO NOT MISS
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
MSD 🤝 Hat-trick of Sixes 🤝 Wankhede going berserk
Sit back & enjoy the LEGEND spreading joy & beyond 💛 😍
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #MIvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/SuRErWrQTG

