தட்டித் தூக்கிய சிஎஸ்கே.. மலிங்காவுக்கே சவால் விடும் 17 வயது கல்லூரி மாணவர்..விளக்கம் கூறும் சிஇஓ காசி விஸ்வநாத்

ஐபிஎல் சீசன் தொடக்கப் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளதால், இரு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சி முகாமில் 17 வயதான இலங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை சிஎஸ்கே நிர்வாகம் நெட் பவுலராக சேர்த்திருக்கிறது.

- Advertisement -

17வது ஐபிஎல் சீசன் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூர் அணியும் களத்தில் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது இளம் வீரர்களை வைத்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பத்திரானா காயம் காரணமாக இரு வாரங்கள் வரை விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வேவும் காயத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான மாற்று வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில், களத்தில் இறங்கியுள்ள சென்னை அணி நிர்வாகம், சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் 17 வயதான இலங்கை அணியின் ஜாப்னாவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரைச் சேர்த்துள்ளது.

- Advertisement -

இலங்கையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் மலிங்காவின் பௌலிங் ஸ்டைலை பின்பற்றி, அதே வேகம் மற்றும் துல்லியத்துடன் தரமான யார்க்கர் ஒன்றை வீசி இருக்கிறார் இந்த குகதாஸ் மதுலன். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை சாமர்த்தியமாக சென்னை அணியின் பயிற்சி முகாமில் இணைத்துள்ளது.

தரமான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் எப்போதுமே கைதேர்ந்த சென்னை அணி இம்முறையும் இந்த இளம் திறமையை தவறவிடவில்லை. இவர் பந்து வீசும் ஸ்டைலைப் பார்த்து தோனி மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய ஜூனியர் மலிங்கா என்று கூறப்படும் இவரின் எதிர்காலம் தற்போது பிரகாசமாகியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில்
“நாங்கள் தற்போது இவரை நெட் பவுலராக எடுத்துள்ளோம். சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை கண்டறிந்து எடுத்தது. எம்எஸ் தோனி இதில் ஈடுபடவில்லை. ஆனால் இவர் பந்து வீசுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இவரின் பந்துவீசும் ஆக்சன் சிறப்பாக உள்ளதால் இவரை வைத்து பயிற்சி பெறுவது நல்லது என்று நினைத்தோம்.

பொதுவாக பயிற்சியின் போது பல்வேறு வகையான பந்துவீச்சாளர்கள் கிடைப்பார்கள்.அதில் இவரும் ஒருவர்” என்று கூறி இருக்கிறார்.
எனவே இவர் பயிற்சி முகாமில் சிறப்பாக வீசும் பட்சத்தில், அடுத்த சீசனில் இவர் சென்னை அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிங்காவின் இரட்டை தாக்குதலுடன் சென்னை அணி நிர்வாகம் அடுத்த சீசனில் களமிறங்க உள்ளது என்றே சொல்லலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles