ஐபிஎல் தொடரின் 2வது நாளிலேயே எல்-கிளாசிக்கோ ஆட்டம்.. கண்டத்தில் சிக்கிய மும்பை அணி.. எந்த மைதானத்தில் தெரியுமா?

மகளிருக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக எப்போது ஐபிஎல் தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பதால், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் கவனம் அதன்பக்கம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான பணிகளை அந்தந்த அணி நிர்வாகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி தனது சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. கொல்கத்தா அணியை எதிர்த்து சிஎஸ்கே, மும்பை அல்லது ஆர்சிபி ஆகிய 3 அணிகளில் ஒரு அணி விளையாடும் என்று பார்க்கப்பட்டது.

- Advertisement -

2வது நாளிலேயே எல் கிளாசிக்கோ?

- Advertisement -

அதன்படி மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2வது போட்டியில் கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் மும்பை மற்றும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் தங்களின் அணிகளுக்கு எப்போது ஆட்டம் என்ற தொடர்ச்சியாக விவாதித்து வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2வது நாளில் நடத்த முடிவு செய்யப்பட்டாலும், அதனை பகல் போட்டியாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மும்பை vs சிஎஸ்கே

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்று இரு போட்டிகள் நடக்கவுள்ளது. இதன்படி அன்றைய நாளில் 2வது ஆட்டமாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கவுள்ளது. எல்-கிளாசிக்கோ ஆட்டம் எந்த மைதானத்தில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி அதிகளவில் வென்றதில்லை. 18 சீசன்களில் அதிகபட்சமாக தோல்வியையே முதல் போட்டியில் மும்பை அணி பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles