நான் உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்ல மாட்டேன்.. இது மட்டும் சரியா இருக்கான்னு செக் பண்ணுவேன்.. கேப்டன்சி குறித்து தோனி ருத்ராஜூக்கு சொன்ன அறிவுரை

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டின் பிதாமகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவர் எங்கு சென்றாலும், எந்த மாநிலத்தின் மைதானத்தில் விளையாடினாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் அவரை உற்சாகப்படுத்த எப்போதும் களத்தில் இருப்பார்கள்.

- Advertisement -

அவர் பேட்டிங் செய்ய களம் இறங்கும் அந்த நொடி மைதானமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த அளவிற்கு கிரிக்கெட்காக பல சாதனைகளை படைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. இந்த நிலையில் கேப்டன் பதவி குறித்து தோனி தனக்கு சில முக்கியமான விஷயங்களைக் கூறியதாக தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறி இருக்கிறார்.

- Advertisement -

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் பதவியை ஏற்ற மகேந்திர சிங் தோனி 2023ஆம் ஆண்டு வரை சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஐந்து ஐபிஎல் பட்டங்களையும் வென்று கொடுத்துள்ளார். எனவே இனி இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் விதமாக அவரே ருத்ராஜிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்துவிட்டு தற்போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டியை காணாத ரசிகர்களும் மைதானத்திற்கு படையெடுத்து தோனியை கண்டுகளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போதைய கேப்டன் ஆன ருத்ராஜ் புதிய கேப்டன் பதவி குறித்து நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது
“மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவி குறித்து என்னிடம் முன்னரே கூறியிருந்ததால் கடந்த ஆண்டில் நான் கேப்டனாக இருந்திருந்தால் என்ன மாதிரியான பீல்டிங் செட்-அப்பை வைத்திருப்பேன். களத்தில் வீரர்களுக்கு என்ன ஆலோசனைகளை வழங்குவேன் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருப்பேன். பின்னர் இந்த ஆண்டில் நான் கேப்டனாக பதவி ஏற்றதிலிருந்து அவரிடம் எந்த ஆலோசனையும் கேட்டதில்லை என்பது குறித்து எனது மகிழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

தோனி என்னிடம் உறுதியாக ஒரு விஷயத்தை மட்டும் கூறினார். நான் உனக்கு எந்த அறிவுரையும் வழங்கப்போவதில்லை. நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன்னுடைய சொந்த முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த முடிவுக்கு நீ மட்டுமே முழு பொறுப்பு. நான் இந்த விஷயங்கள் எதிலும் தலையிட போவது கிடையாது. ஆனால் ஃபீல்டிங் மட்டும் சரியான கோணத்தில் இருக்கிறதா? என்பதை மட்டும் அவ்வப்போது செக் செய்து கொள்வேன். 50க்கு 50 ஏதாவது ஆலோசனைகளைக் கூறுவேன்.

இதையும் படிங்க:நாங்கள் விளையாட நினைத்த விதம் வேறு.. இந்த சீசனில் எங்களுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.. தோல்விக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பேட்டி

நான் எந்த ஃபீல்டிங் செட் அப்பை மாற்றி அமைத்தாலும், மாற்றி அமைத்த பின்னர் அவர் மீது நான் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்வேன். ஆனால் அவரே என்னிடம், நான் ஏதாவது சொன்னால் நீங்கள் அதை முழுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்” என்று கேப்டன் ருத்ராஜ் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles