நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த மும்பை அணி கடைசியில் ஏமாற்றமாக தோல்வியை தழுவியது. தோல்விக்கான காரணங்கள் குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டி முதலில் மழையால் ஆட்டம் தாமதிக்கப்பட்டு பின்னர் 20 ஓவர்களில் இருந்து 16 ஓவராக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 157 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும், நித்திஷ் ராணா 23 பந்துகளில் 33 ரன்களும் குவித்தனர். இதற்குப் பிறகு வெற்றியி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் விதத்தை பார்த்தால் வெற்றி பெற்று விடும் என்று அனைவருக்கும் தோன்றியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இசான் கிசான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி ஐந்து ஓவர்களில் 65 ரன்கள் குவித்து தங்களது முதல் விக்கட்டை பறிகொடுத்தது.
நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த மும்பை அணி அதற்குப் பிறகு எடுத்துச் செல்லாததால் அடுத்த ஒன்பது ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே குவித்து ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.
எனவே தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹார்த்திக் பாண்டியா கூறும் பொழுது
“எங்களுடைய பேட்டிங்கில் தொடக்கம் நல்ல விதமாக அமைந்தது. ஆனால் அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவற விட்டோம். ஆடுகளம் இருமுனை கத்தி போல மேலும் கீழுமாக இருந்தது. இப்படியான ஆடுகளத்தில் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பது மிகவும் அவசியம். பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் செயல்படும் விதத்தை பார்த்தால் இந்த இலக்கு எங்களுக்கு எட்டக்கூடியது என்று நினைத்தேன்.
மைதானத்திற்கு சென்று பந்து ஒவ்வொரு முறை திரும்பி வரும் போதும் ஈரமாகியே பெரும்பாலும் காணப்பட்டது. அதே சமயம் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். எனவே அடுத்த ஆட்டம் குறித்து எந்த திட்டமும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே நாங்கள் விளையாட விரும்பிய கிரிக்கெட்டே வேறு. நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாட நினைத்தோம். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:இது மட்டும் உண்மையா இருந்திருந்தா.. ஹர்திக் பாண்டியா உ.கோ டி20 டீம்ல இருந்துருக்கவே மாட்டாரு.. உண்மையை உடைக்கும் மைக்கேல் கிளார்க்
13வது போட்டியில் விளையாடிய மும்பை அணிக்கு இது தற்போது ஒன்பதாவது தோல்வியாக அமைந்திருக்கிறது.அதே நேரத்தில் ஒன்பதாவது வெற்றியை பெற்றுள்ள கொல்கத்தா அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று இருக்கிறது.

