நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் செல்வதற்கு இன்னும் எத்தனை போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை முன்பு எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு அனைத்து அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பேட்டிங் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அனைத்து அணிகளும் வலுவாக இருக்கும்போது குறிப்பிட்ட நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனை போலவே இந்த முறையிலும் தடுமாறி வருகிறது.
மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியும் அதற்குப் பிறகு நடைபெற்ற மூன்று போட்டியிலும் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. மொத்தமாக ஒரு அணிக்கு 14 லீக் போட்டிகள் இருக்கும் நிலையில் சிஎஸ்கே ஏற்கனவே நான்கு போட்டிகளில் விளையாடிவிட்டது.
எனவே இனி 10 போட்டிகள் சென்னை அணிக்ku இருக்கும் போது 10ல் 7 போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இதுவரை அதிக முறை ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறையும் இந்த முறையும் மோசமான சீசனாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பலமாக இருக்கும்போது பேட்டிங் பலவீனமான நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக பவர் ஹிட்டர்கள் இல்லாததால் தடுமாறி வரும் சென்னை அணியில் ஜெமி ஓவர்டன்னை பினிஷிங் ரோலில் களம் இறக்கி விளையாட வைக்கலாம். சிஎஸ்கே அணியில் இருக்கிற ஒரே பவர் ஹிட்டர் என்றால் அது இவர் மட்டுமே ஆகும். வேண்டுமென்றால் தொடக்க ஆட்டக்காரர் கான்வே அல்லது ரவீந்திரா ஆகியோருக்கு பதிலாக இளம் வீரரை ஓபனிங் செய்ய வைத்து விட்டு ஓவர்டன்னை களம் இறக்கி பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தலாம்.

