ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்க முடியும்? எத்தனை மணிக்கு போட்டி தொடங்கும்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் மண்ணில் தொடங்கவுள்ளது. 2017ம் ஆண்டுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 19 நாட்கள் நடக்கவுள்ள இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலில் நடக்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் அணி நடத்தினாலும், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது.

- Advertisement -

2 குரூப்-கள்

- Advertisement -

பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக ஹைபிரிட் மாடலுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மாற்றப்பட்டது. மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 4 அணிகள் என்ற அளவில் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குரூப்பில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த குரூப் சுற்றில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். டாப் 8 அணிகளுக்கு இடையில் நடக்கும் தொடர் என்பதால், ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட அந்த அணிக்கு வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது.

- Advertisement -

எத்தனை மணிக்கு ஆட்டம்?

நாளை நடக்கவுள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது. இந்த போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டு, பின்னர் இரு அணிகளைச் சேர்ந்த நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டு 2.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையில் பார்க்க முடியும். ஓடிடி செயலியை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் செயலியில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles