“இங்கிலாந்தை நாங்க ஜெயிப்போம் அப்படின்னு என்னால சொல்ல முடியாது” – அஸ்வின் ஓபன் ஸ்டேட்மென்ட்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்த கடைசி காலகட்டத்திலேயே இந்தியாவில் பந்து முதல் நாளிலிருந்து திரும்பும் அளவுக்கான ஆடுகளங்கள் அமைக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கடந்த முறை இங்கிலாந்து இங்கு வந்த பொழுது இந்த முறைக்கு மீண்டும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திரும்பி இருந்தது!

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கண்டிஷன்னிலும் உதவியில்லை, அதேபோல் ஆடுகளத்திலும் எந்த விதமான உதவியும் இல்லாமல்தான் இருக்கின்றன. சுழற் பந்துவீச்சாளர்கள் முதல் நாளிலிருந்து ஆட்டத்திற்குள் வந்துவிடும் நிலைதான் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் ஆட்டம் மூன்றாவது நாளிலேயே முடிந்து விடுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கு வந்த ஆஸ்திரேலியா அணியும் கூட சுழற் பந்துவீச்சையே முழுவதுமாக நம்பி இருந்தது. இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் போல ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்தார்கள். நடந்து முடிந்த அந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என வென்றது.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு புறத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி மிகவும் அதிரடியான பாணியில் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்களின் இந்த அதிரடியான டெஸ்ட் கிரிக்கெட் முறைக்கு உலகெங்கும் புதிய ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள்.

கிரிக்கெட் உலகம் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாக அடுத்த வருடம் துவக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்ய இருப்பதுதான் இருக்கிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து எல்லாம் பேசியுள்ள இந்திய அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரரான சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ” நான் ஆடுகளத்தை உருவாக்குவதில்லை. நான் ஆடுகளத்தில் ரோலர் உருட்டுவதில்லை. எனக்கு கொடுக்கப்படுகின்ற ஆடுகளத்தில் நான் விளையாடுகின்றேன். இப்படியான விஷயங்கள் அணியின் நலன் கருதி அணி நிர்வாகம் எடுக்கின்றது. மேலும் இப்படியான ஆடுகளங்களில் நானும் ஜடேஜாவும் நாதன் லயனும் எல்லோரும் ஒன்றுதான்.

இங்கிலாந்து மிகவும் உற்சாகமான ஒரு கிரிக்கெட் பிராண்டில் விளையாடுகிறது. இது உலகம் முழுதும் பலரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மறுபுறம் எங்களை எடுத்துக் கொண்டால் நாங்களும் சீரான முறையில் வெற்றி பெற்று சமமான அணியாக இருந்து வருகிறோம்.

அந்தத் தொடர் குறித்து என்னால் அவர்கள் இங்கு வரும் வரை காத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பின்னோக்கி இந்த தொடரில் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எப்படி விளையாடுகிறார்களோ அப்படியேதான் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தச் சமயத்தில் நாங்கள் இங்கிலாந்தை வீழ்த்துவோம் என்று நான் சொல்வது மிகையான ஒன்றாக இருக்கும். நாங்கள் இங்கிலாந்தை வீழ்த்துவோம்!” என்று சொல்ல முடியாது என்று கூறி இருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles