இந்த ஐபிஎல் தொடருக்கு அதிகபட்ச விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக கேமரூன் கிரீன் இருக்கிறார். அவரைக் கடந்த மினி ஏலத்தில் 25.50 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது.
இதன் அடிப்படையில் அவர் ஒரு போட்டிக்கு குறைந்தபட்சமாக 1.80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் பெறுகிறார். ஆனால் கடந்த ஐந்து போட்டிகளாக அவர் பேட்டி மற்றும் பந்துவீச்சு என எதிலும் எந்த ஒரு தாக்கத்தையும் செய்யவே இல்லை.
இந்த அடிப்படையில் மட்டும் அவர் ஐந்து போட்டிகளில் சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு அந்த அணிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எந்தவித பங்களிப்பையும் செய்யாமல் ஒன்பது கோடி ரூபாய் அவர் பெயருக்கு சென்றுள்ளது.
இந்திய வீரர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய திலக் வர்மா சம்பளம் எட்டு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரது சம்பளமும் இவ்வளவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

