இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பும்ரா காயம் அடைந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அவரது காயம் எப்படிப்பட்டது? நாளை அவரால் விளையாட முடியுமா என்பது குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா மீது மட்டுமே அதிக அளவு அழுத்தம் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஏனென்றால் அவரோடு நன்றாக பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடிய முகமது ஷமி இந்தத் தொடரில் விளையாடாததால் சிராஜை தவிர அவருக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பவுலர் இந்திய அணியில் இல்லை. இந்திய அணியும் இவரை வைத்து மட்டுமே ஆஸ்திரேலியா தொடரில் முழுவதுமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முதுகுப் பகுதியில் காயம் அடைந்த பும்ரா நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இந்திய அணியை விட்டு விலகி இருந்தார். தற்போது நடைபெற்று வரும் போட்டியில் அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரண்டாவது நாளின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
இந்த நிலையில் பும்ராவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவர் நாளை விளையாடுவாரா என்பது போன்ற தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கும் நிலையில் பும்ரா தற்போது சென்டியனில் உள்ள பார்க் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு முதுகுப் பகுதியில் வலி இருப்பதால் அந்தப் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கேன் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அந்த சின்ன பையன் பும்ரா கூட.. சண்டை போட உண்மையான காரணம் இதுதான்.. இதனால எங்களுக்கு தான் இழப்பு – ரிஷாப் பண்ட் பேட்டி
இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெயிப்பதற்கும் கிட்டத்தட்ட வாய்ப்புகள் இருக்கும் நிலையில் பும்ரா பந்து வீசாமல் இருந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி விடும் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. எனவே பும்ரா நாளை விளையாடுவாரா அல்லது தொடரில் இருந்து வெளியேறுவாரா என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்திருக்கிறது. இதில் ரிஷப் பண்ட் மட்டும் அதிகபட்சமாக 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்திருக்கிறார்.

