நம்பர்.1 வீரரா வர இந்த இந்திய வீரரை ஃபாலோ பண்ணு.. என் பையன்கிட்ட சொல்லி இருக்கேன்.. பிரைன் லாரா ஓபன் டாக்.!

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா, தனது மகன் இந்த இந்திய சூப்பர் ஸ்டாரைப் பின்பற்றி நம்பர்.1 விளையாட்டு வீரராக வர வேண்டும் என்று விரும்புகிறார்.

- Advertisement -

கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதைத் தாண்டி அது உடலையும், மனதையும் ஒருசேர ஒருங்கிணைக்கும் மையப் புள்ளி. இது மனதினை ஒருநிலைப்படுத்தி எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்புடன் செய்ய உதவுகிறது.

- Advertisement -

கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேன் வில்லியம்சன், கெவின் பீட்டர்சன், ஏபி டிவில்லியர்ஸ் என இந்தியாவில் மற்ற நாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.

- Advertisement -

மேற்கு இந்தியதீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா, கொல்கத்தாவில் நடைபெற்ற டைகர் பட்டோடி நினைவு விரிவுரையில் பேசிய போது, கிரிக்கெட் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“கிரிக்கெட்டில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மட்டுமே ஒருவனை வெற்றிகரமாக மாற்றும். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் ஒரு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.

- Advertisement -

“அப்படி அவன் சாதிக்க விரும்பினால், நான் விராட் கோலியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பின்தொடரச் சொல்வேன். அவனை நம்பர்.1 வீரராக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். முதலில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட கோலிக்கு எனது பாராட்டுக்கள். அவரது அர்ப்பணிப்பு என்னை பெரிதும் கவர்ந்தது”.

“இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் கோலியின் செயல்பாடு ஒரு பொருட்டல்ல என்று பலர் கூறுவார்கள் என்று ஏற்கனவே எனக்குத் தெரியும். டீம் ஸ்போர்ட் என்பது வெற்றி பெறுவதைப் பற்றியது, தனிப்பட்ட வீரராக நீங்கள் அதை உங்கள் நம்பர்.1 இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். விராட் கோலி இந்த உலகக் கோப்பை முழுவதும் செய்தது அதைத்தான்” என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles