தோனி ஆடிய சரவெடி ஆட்டம்.. உறைஞ்சு போன மும்பை அணி.. கூறுகிறார் சிஎஸ்கே பவுலிங் ஆலோசகர்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி அடித்த கடைசி மூன்று சிக்ஸர்களால் மும்பை அணியின் நிலை குறித்துக் கூறி இருக்கிறார் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ்.

- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. முதலில் சென்னை அணி விளையாடிய விதத்தைப் பார்த்தால் 180 முதல் 190 ரன்கள் வரைதான் குவிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஆட்டத்தின் 19 ஆவது ஓவர் வரை சென்னை 180 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.

- Advertisement -

அதன் பிறகு கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, தொடர்ச்சியாக மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விலாசி அணியின் ஸ்கோரை வெகுவாகவே உயர்த்தி விட்டார். அவர் அடித்த மூன்று சிக்ஸர்களால் வான்கடே மைதானமே அதிர்ந்தது.

- Advertisement -

தோனி காட்டிய வான வேடிக்கையால் ரசிகர்கள் கொண்டாடித் திளைத்தனர். இறுதியில் இப்படி ஒரு சரவெடி ஆட்டத்தால் சென்னை அணி எளிதாக 200 ரன்களை கடந்தது. 200 ரன்கள் என்றாலே எதிரணிக்கு மனரீதியாக ஒரு உளவியல் பாதிப்பை கொடுக்கும். பிறகு இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு சென்னை அணியின் அபார பந்துவீச்சினால் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்து சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறும் பொழுது
“தோனியை மிகவும் நெருக்கமாக பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ஆனாலும் ஒவ்வொரு போட்டியின் போதும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்.

- Advertisement -

சீசன் தொடங்கி இப்போது வரைக்கும் பேட்டிங்கில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான அவரது அதிரடி ஆட்டம் மற்றொரு தோனி மொமண்ட். மேலும் உளவியல் ரீதியாக எதிரணியின் மீது அழுத்தம் ஏற்றுவது மிகவும் முக்கியம். மகேந்திர சிங் தோனி அப்படி ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடிய பிறகு இன்னிங்ஸ் பிரேக்கில் எதிரணியினர் கொஞ்சம் உறைந்துதான் போயிருப்பார்கள்.

இதையும் படிங்க:என்ன பவுலிங் இது.. சுமாரான கேப்டன்சி.. சிஎஸ்கேவ இவ்வளவு அடிக்க விட்ருக்க கூடாது.. கூறுகிறார் சுனில் கவாஸ்கர்

மும்பை அணியினர் எங்களை 200 ரண்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தார்கள். ஆனால் தோனியின் உதவியால் நாங்கள் 206 ரன்களைக் குவித்தோம் என்று கூறியிருக்கிறார். இந்த போட்டியின் மூலம் சென்னை அணி நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles