என்ன பவுலிங் இது.. சுமாரான கேப்டன்சி.. சிஎஸ்கேவ இவ்வளவு அடிக்க விட்ருக்க கூடாது.. கூறுகிறார் சுனில் கவாஸ்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் பேட்டிங்கின் போது எம் எஸ் தோனி அடித்த மூன்று தொடர்ச்சியான சிக்ஸர்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. கடைசி ஓவரை வீசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சுனில் கவாஸ்கர் விமர்சித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. தொடக்கம் முதலே ஓரளவு சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர் வரை 175 முதல் 180 ரன்களுக்குள்ளேயே இருந்தது. கடைசி ஓரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார்.

- Advertisement -

இரண்டு வைட்கள் மற்றும் ஒரு பவுண்டரிக்குப் பிறகு சென்னை அணி வீரர் டாரி மிச்சலை வெளியேற்றினார். பிறகு அதிரடி பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சர்க்கு விளாசினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க, இன்னிங்ஸ் இன் முடிவில் சென்னை அணி 206 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சென்னை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக இலங்கை அணி வீரர் பத்திரனா நன்றாக பந்து வீசி நான்கு முக்கிய விக்கெடுகளை வீழ்த்தியதன் மூலம் மும்பை அணியை தோல்வியடைய வைத்தார். இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியும், சுமாரான பந்துவீச்சும்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் ஒரு சிக்சர் போனால் பரவாயில்லை. பேட்ஸ்மேன் அடிக்க ஒரு லென்த் பந்தை தான் தேடுகிறார் என்பது உங்களுக்கும் தெரியும். திரும்பவும் எதற்காக மீண்டும் ஒரு லென்த் பால்?

- Advertisement -

அதுவும் மூன்றாவதாக ஒரு சிக்சர் அடிக்க லெக் சைடில் ஒரு புல்டாஸ் பந்து. இது முற்றிலும் சாதாரணமான பந்துவீச்சு மற்றும் சாதாரணமான கேப்டன்சி. சென்னை அணியினரை விரைவாகவே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். சிவம் டுபே மற்றும் ருத்ராஜ் ஆகியோர் நன்றாகவே இணைந்து விளையாடி இருந்தாலும், சென்னை அணியினரை 185 முதல் 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:முதல்ல கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு.. ஆனா முதல் பந்து வீசினதுக்கு அப்புறம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் பேட்டி

இதன் மூலம் மும்பை அணி நான்காவது தோல்வியை தழுவி இருக்கிறது. இனி வரும் போட்டிகளை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டியது மும்பை அணிக்கு மிகவும் அவசியம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles