நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
நேற்று ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் முதல் போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வென்று கொல்கத்தா அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் விளையாட தயாராவதற்கு, அந்த அணிக்கு குஜராத் கல்லூரியின் மைதானம் பயிற்சி செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு ஆர்சிபி எந்த வித பயிற்சியிலும் ஈடுபடவில்லை. மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை.
குஜராத் அகமதாபாத் நகரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட இருந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக கிரிக்கெட் உலகில் மிக முக்கிய வீரரான விராட் கோலியின் பாதுகாப்பு காரணம் கருதி, குஜராத் காவல்துறை எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியது. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஆர்சிபி அணியும் பயிற்சியில் ஈடுபடவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிறுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக குஜராத் காவல்துறை சார்பில் கூறும் பொழுது ” விராட் கோலி அகமதாபாத் வந்த பிறகுதான் இப்படியான கைது நடவடிக்கை பற்றி அறிந்தார். அவர் நமது நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம். எனவே எங்களுக்கு அவருடைய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது” என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு காத்திருக்கும் ஆப்பு.. பிளே ஆப்னாலே கோலிக்கு ஆகாது போல.. இதுல எங்க கப் வாங்குறது.. கூறும் புள்ளிவிபரம்
மேலும் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அந்த அணியில் அஸ்வின் ரியான் பராக், மற்றும் சாகல் ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அணிக்கும் கிரீன் கார்டர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதோடு ஆர் சி பி அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில், அனுமதி பெற்ற ஆர்சிபி அணி சம்பந்தம் உடையவர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

