இந்த வருஷமும் போச்சா.. ஐபிஎல் போட்டிகளை கைவிட போவதாக அறிவித்த பிசிசிஐ.. வருத்தத்தில் ஆர்சிபி ரசிகர்கள்.. மீண்டும் போட்டிகள் எப்போது.? முழு விபரம்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா சில சில சிக்கல்களின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தற்போது அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதன் மீதமுள்ள போட்டிகள் வெகு விரைவாகவே நடத்தப்படும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

பதினெட்டாவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வந்த நிலையில், நேற்று இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாதியால் நிறுத்தப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த ஐபிஎல் தொடர் தற்போது கைவிடப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டம் காரணமாக, ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசிசிஐ எடுத்த இந்த முடிவு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்திருந்தால் மீதமுள்ள போட்டிகளை தென்னிந்தியாவில் வைத்து நடத்தி இருக்க முடியும். ஆனால் நாடு தற்போது இருக்கும் நிலையில் கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மேலும் வருகிற ஜூன் இருபதாம் தேதி இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் முடிவடைந்த பிறகு மீண்டும் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி மற்ற அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த 17 வருடங்களாக கோப்பையை வெல்லாமல் ஆர்சிபி இருக்கும் நிலையில் இந்த வருடம் தான் பெங்களூர் அணி சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:எனக்கு இன்னும் ஒரே ஒரு வேலை மட்டும் இருக்கு.. அது மட்டும் நடந்தா கிரிக்கெட்டில் இருந்து மொத்தமா விலகிடுவேன் – இந்தியா கேப்டன் ரோஹித்

எனவே தற்போது போட்டிகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் அது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெற உள்ள ஆசிய கோப்பையும் நடைபெறாது என்று தெரிகிறது. ஆசிய கோப்பை நடைபெறும் தேதிகளில் இந்திய நிர்வாகம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை வைத்து நடத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் பிசிசிஐ போட்டி நடைபெறும் தேதி மற்றும் மைதானம் குறித்த தகவல்களை விரைவாக வெளிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles