அடி மேல் அடி வாங்கும் சிஎஸ்கே.. மேலும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்..ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லும் காட்சி..சிக்கலில் தவிக்கும் அணி நிர்வாகம்

2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் தொடர். இதுவரை வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை அணிக்கு இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே அணி வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு நட்சத்திர வீரர் காயம் அடைந்திருப்பது சென்னை அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.

- Advertisement -

இதுவரை ஐந்து பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத அணிகளில் ஒன்றாகும்.இதற்குக் காரணம் அணித் தேர்வும், எம் எஸ் தோனியின் கேப்டன்சி செயல்பாடுகளும் மற்றும் வீரர்கள் காயம் அடையாமல் முழு தொடரிலும் பங்கேற்பதே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

ஆனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் டுபே ரஞ்சித் தொடரின் போது காயம் காரணமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அவரது காயம் குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளிவராத நிலையில், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயம் காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

அவரது காயம் தீவிரமாக இருக்கும் நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் 8 வாரங்கள் அவர் ஐபிஎல்லில் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது. இதற்கு மாற்று வீரரான ரச்சின் ரவீந்தராவை வைத்து சென்னை அணி சமாளித்துக் கொள்ளும். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை ஒரு வீரர் காயம் அடைந்தால் அது அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் மேலும் ஒரு பின்னடைவாக இலங்கை அணியின் பத்திரனா வங்கதேச தொடரின் போது காயம் அடைந்து வெளியேறினார். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கு கொள்வாரா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே அவருக்கு மாற்று வீரராக வங்காளதேச வீரரும் மற்றும் அனுபவ வீரரான முஸ்தபிசுர் ரகுமான் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான உள்நாட்டில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, உடல் முழுவதும் ஏற்பட்ட கிராம்பு காரணமாக களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் அவரை மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சர் வைத்து தூக்கி செல்லும் புகைப்படம் வெளிவந்து இருக்கிறது.

எனவே அவரும் சென்னை அணிக்கு கிடைக்காவிட்டால், சென்னை அணி மிகப் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கடந்த சீசனில் மத்திஷா பத்திரனாவுக்கு இறுதி கட்ட ஓவர்களை கொடுத்து அணியினை வெற்றி பெற வைத்து வந்தார் எம் எஸ் தோனி. தற்போது அவரும் காயம் அடைந்திருப்பதால், அவருக்கு பதிலாக மாற்றுவீரராக இவராவது செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே இவரும் தற்போது கிடைக்காவிட்டால் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக அமையும். ஒரு அணி எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்களை வைத்திருந்தாலும், இறுதி கட்டத்தில் பந்து வீசக்கூடிய பவுலர் என்பது ஒரு அணிக்கு மிகவும் தேவை. அப்படி இல்லாத பட்சத்தில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை மற்ற அணிகள் எளிதாக சேஸ் செய்து விடும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles