5வது ஓவர் 20 ரன்.. எங்க தோல்வி அங்கதான் ஆரம்பிச்சது.. தோல்விக்கு பின்னர் டூப்ளசிஸ் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்த ஆர்சிபி அணி இறுதியில் அந்த அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைக்க, கடந்த சில ஆட்டங்களில் தொடக்கம் நன்றாக அமையாத நிலையில் இந்த போட்டியில் விராட் மற்றும் பிளஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாடினர்.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்த நிலையில், பாப் டு பிளசிஸ் 33 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் கேப்டனுக்கு பிறகு வந்த வீரர்கள் யாரும் விராட் கோலிக்கு சரியான ஒத்துழைப்பை கொடுக்காததால், விராட் கோலியால் அதிரடியாக ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை.

- Advertisement -

67 பந்துகளில் 100 ரன்கள் கடந்த அவர், பின்னர் 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 6 பந்துகளுக்கு ஐந்து ரன்கள் குவித்து இருந்தார். விராட் கோலியின் நிலையான ஆட்டத்தில் மட்டுமே பெங்களூர் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்திருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்ததாகவும் சுழலுக்கு எதிராக ஆடுகளம் கடினமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.

பின்னர் 184 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதும் என்று வெளியேற நிலையில், அதன் பிறகு பட்லருடன் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். 148 ரன்கள் குவித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் வெளியேற, அதற்குப் பிறகு நிலைத்து நின்ற பட்லர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

58 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் ஒன்பது பவுண்டரி,நான்கு சிக்ஸர்கள் என 100 ரன்கள் விளாசி, ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். தோல்விக்கு பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் கூறும்பொழுது
“நானும் விராத் கோலியும் இணைந்து விளையாடும் பொழுது இந்த ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். இங்கு 190 ரன்கள் குவிப்பது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்த வேளையில் இன்னும் 10 முதல் 15 ரன்கள் குவித்திருக்கலாம்.

அப்போது விளையாடிய கிரீன் மற்றும் கோலி இருவருமே முயற்சி செய்த நிலையில் ஆடுகளம் கடினமாக இருந்தது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக, சுழற் பந்துவீச்சுக்கு கடினமாக இருந்தது. பந்து வீசிய பொழுது ஆரம்பத்தில் நன்றாக இருந்தோம். பின்னர் ஐந்தாவது ஓவரில் டாகர் கொடுத்த இருபது ரன்கள் ஆட்டத்தை மாற்றியது. ஜெய்ஸ்வாலை தவிர மற்ற அனைவரும் வலது கை ஆட்டக்காரர்கள் என்பதால் மேக்ஸ்வெல் பந்து வீசவில்லை. இதன் காரணமாக லெக் ஸ்பின்னர் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களையும் ராஜஸ்தான் அணி அடித்து ஆடினார்கள்.

இதையும் படிங்க:அஸ்வின் நான் நினைச்ச மாதிரி இல்ல.. அவருக்கு எதிரா விளையாடுறது கஷ்டம்.. கிங் கோலி பேட்டி

ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அதுவும் ஆட்டத்தில் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இது பற்றி கவலைப்படாமல் அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறுவதில் கவனமாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles