ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் தரம்.. ஐசிசி தொடரில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடுகிறோம்.. வார்னிங் கொடுத்த ரோகித் சர்மா

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை மட்டும் சேர்த்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் காரணமாக அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ரோகித் சர்மா பேச்சு

- Advertisement -

இந்த வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, எப்போதும் லீக் சுற்றை வெற்றியுடன் முடிப்பது முக்கியம். நியூசிலாந்து மிகச்சிறந்த அணி. சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். எங்களின் ஆட்டம் சரியானதாக இருந்தது. 30-3 என்ற நிலையில் இருந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது மிக முக்கியமான விஷயம். பேட்டிங்கின் முடிவில் சிறந்த இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று நினைத்தேன்.

ஏனென்றால் இந்திய அணியிடம் 250 ரன்கள் என்ற இலக்கை டிஃபெண்ட் செய்ய தரமான பவுலிங் அட்டாக் உள்ளது. வருண் சக்கரவர்த்தி கொஞ்சம் வித்தியாசமானவர். அதனால் அவரை சோதனை செய்து, அவரால் என்ன பங்களிப்பு அளிக்க முடிகிறது என்பதை பார்க்க நினைத்தேன். அதனால் இந்த போட்டியில் வாய்ப்பு கொடுத்தோம்.

- Advertisement -

இந்தியா vs ஆஸ்திரேலியா

அடுத்த போட்டி குறித்த எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் இனி அது சிறந்த தலைவலியாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஒரு சிறிய தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற சரியான விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் தவறுகளை விரைவாக சரி செய்ய வேண்டும். அங்குதான் நாம் ஒரு அணியாக அடுத்த கட்டம் செல்கிறோமா அல்லது கீழ் இறங்குகிறோமா என்பது தெரியும்.

நிச்சயமாக ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடுவது சிறந்த போட்டியாக இருக்கும். ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா சோடை போனதில்லை. மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் இம்முறை எங்களை பற்றி சிந்திக்கிறோம். அந்த நாளில் சரியான விஷயங்களை செய்ய வேண்டும். அந்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இன்னும் ஒரு கோப்பையை இம்முறை எங்கள் பக்கம் கொண்டு வருவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles