எல்லாமே அங்க தான் மாறிடுச்சு.. எங்க தோல்விக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் தான் காரணம்.. ஆஸ்திரேலிய கேப்டன் வருத்தம்.!

உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததும் துவங்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எனவே ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாகத் தான் இருந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணித் தரப்பில் பெஹந்திராப் மற்றும் டார்சிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தனர்.

- Advertisement -

அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு மேக் டோர்மேட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றது.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, அணியின் கேப்டன் மேத்யூ வேட் களத்தில் நின்றார். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகள் ரன்கள் எடுக்காமல் விட மூன்றாவது பந்தில் மேத்யூ வேட் ஆட்டம் இழந்தார். இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ரவி பிஸ்னாய் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் ” இந்த மைதானத்தில் 160 ரன்னை நாங்கள் சேஸ் செய்து எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் இது எங்களுக்கு ஒரு ஏமாற்றமாக மீண்டும் அமைந்துவிட்டது. பேட்டிங்கில் கடைசி ஆறு ஓவர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் டாப் ஆர்டரில் விளையாடுவது குறித்து பேசப்படுகிறது. ஆனால் தற்போது டி20 உலகக் கோப்பைத் தொடர் நெருங்கி வருகிறது. என் வேலை இந்த ஆர்டரில் இறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுப்பது தான்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறோம். எங்கள் அணியில் சில வீரர்கள் நன்றாக விளையாடினர்கள்” என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles