விராட் கோலி மனுசனே கிடையாது.. அவர் பண்ண வேலை இல்லீகல்.. குஜராத் புகார் செய்யணும் – அஸ்வின் வித்தியாச பேச்சு

நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் அதிரடியாக 81 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தற்போது ஏழு போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உடன் 328 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை அபிஷேக் சர்மாவிடமிருந்து கைப்பற்றியுள்ளார். இந்த வயதிலும் அவர் இளம் வீரர்களுடன் போட்டியிடுவது அபாரமாக உள்ளது.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் பேசும்போது “நேற்று மூளையை வைத்து விராட் கோலி பேட்டிங் செய்த விதம் இல்லீகல். இதற்கு குஜராத் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். ஏனென்றால் நேற்று விராட் கோலிக்கு சரியாக பந்து பேட்டில் படவே இல்லை. சொல்லப்போனால் ஆரம்பத்தில் அவர் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தார்”

- Advertisement -

“இந்த நேரத்தில் பிரசித் மார்புக்கு வீசிய பந்தை மடக்கி அடிக்காமல் கவர் திசையில் தூக்கி அடிக்கிறார். ஹோல்டர் பந்தை உள்ளுக்குள் வீசுகின்ற காரணத்தால், ஆப் சைடு நகர்ந்து வந்து லெஃப்ட் சைடு சிக்ஸர் அடிக்கிறார். பவுலர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிந்து மூளையை வைத்து அதகளம் செய்கிறார். இப்படி ஆடினால் என்ன செய்வது? என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles