இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த இரண்டு வெற்றிகளின் மூலம் கிட்டத்தட்ட இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் இந்த இந்திய வீரர் கண்டிப்பாக தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
தற்போது இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் நியூயார்க் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தவரை இந்தியாவின் பேட்டிங் மட்டுமே சற்று கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்திய அணி கடைசியாக விளையாடி இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் மட்டுமே நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். பன்ட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இன்னும் வழங்கவில்லை. மேலும் அடுத்த போட்டி அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ளதால் இந்திய அணி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பேட்டிங்கில் முன்னேற முயற்சிக்கும்.
மேலும் பந்து வீச்சினை பொருத்தவரை பும்ரா இந்திய அணியின் முக்கிய தூணாக விளங்குகிறார். மேலும் அவரைச் சுற்றி மற்ற இந்திய பவுலர்களும் அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதனால் பும்ராவைச் சுற்றியே பெரும்பாலும் இந்திய அணியின் பந்து வீச்சு அமைந்திருக்கிறது. இதனால் இந்த டி20 உலக கோப்பையில் இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்றும், அப்போதுதான் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் இந்திய முன்னாள் வீரர் கும்ளே கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“பும்ரா பதினைந்தாவது ஓவரில் முக்கியமாக ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தினார். 19 ஆவது ஓவரில் ஒரு வேளை அவர் இரண்டு பவுண்டரிகள் கொடுத்திருந்தால் கூட இருபதாவது ஓவரில் 10 முதல் 12 ரன்கள் தேவைப்பட்டு இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அது போன்ற ஆடுகளத்தில் டெயிலெண்டர்கள் ஆடும் சமயத்தில் 18 முதல் 19 ரன்கள் வரை எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
இதனால் டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பும்ரா தான் மிகப்பெரிய வேலையை செய்ய வேண்டி இருக்கும். இந்த பட்டியலில் அவர்தான் நம்பர் ஒன் வீரராக இருப்பார். இது என்ன மாதிரியான ஃபார்மேட் என்பதை மறந்து விடுங்கள். தற்போது அவர்தான் நம்பர் ஒன் பந்துவீச்சாளர். ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது என்னவோ உண்மைதான்.
இதையும் படிங்க:பாகிஸ்தான்னாலே அலர்ஜியா.? 5 போட்டியிலும் தொடர்ந்து சொதப்பும் சூரியகுமார் யாதவ்.. விளாசும் ரசிகர்கள்
ஆனால் அவர் வீசும் வேரியேஷன்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. பும்ரா உண்மையிலேயே பலமுறை சவாலான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்துள்ளோம். இவருக்கு எதிராக விளையாடும் போது எந்த பேட்ஸ்மேன்னாலும் ரன்கள் குவிப்பது என்பது மிகவும் சிரமமாகும்” என்று கூறியிருக்கிறார்.

