தோனி தூக்கி குப்பையில போட்ட பிளான் அது.. ருதுராஜ் அதை எடுத்து ஆர்சிபி கிட்ட தோத்துட்டாரு – அம்பதி ராயுடு கருத்து

இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பலராலும் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தை பின்பற்றி தோல்வி அடைந்ததாக அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த குறிப்பிட்ட போட்டியில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு கிரீசில் வலது புறம் இருந்து சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்ட ஓவரை வீசினார்கள். இதில் ஜேமி ஓவர்டன் வீசிய ஒரு ஓவரில் டிம் டேவிட் 30 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இது குறித்து அம்பதி ராயுடு பேசியபோது “மோசமான திட்டத்தை கொண்டு வந்ததுடன் அதை தொடர்ந்து சிஎஸ்கே பின்பற்றியது. களத்தில் பந்துவீச்சாளர்களிடம் பேசி 20, 30 நொடிகள் போட்டியை நிறுத்தி வழிகாட்ட யாருமே அங்கு இல்லை. தோனி இந்த திட்டத்தை எப்பொழுதோ கைவிட்டு விட்டார். பேட்ஸ்மேன்கள் நாங்களும் இந்த வகையில் பந்து வீசினால் எளிதாக அடிக்க முடியும் என்று உணர்ந்தோம்”

- Advertisement -

“நீங்கள் இந்த பக்கத்திலிருந்து வீசப்படும் பந்துக்கு ஒரு அரை அடி காலை முன்னே எடுத்து வைத்தால் பந்தின் கோணம் ஒன்றுமில்லாமல் போய்விடும். நீங்கள் கடைசி நேரத்தில் வழக்கமாக வீசும் யார்க்கர், மெதுவான பந்துகள் போன்றவற்றை வீசினாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles