சிஎஸ்கேவை ஜெயிச்சாலே ஐபிஎல் கப் ஜெயிச்சிரலாம்னு நினைச்சுட்டாங்க போல.. விளாசும் அம்பத்தி ராயுடு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றி விட்டு வெளியேறியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு சென்னை அணியை வீழ்த்தி மட்டும் ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை என்று காட்டமான விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக காணப்பட்டாலும் ராஜஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சால் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினர். இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கக்கூடிய ராஜத் பட்டிதார் அதிகபட்சமாக 34 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணித்தரப்பில் ஆவேஷ் கான் மூன்று விக்கெட்டுகளும், அஸ்வின் இரண்டு விக்கெட்களையும் அள்ளினர். அதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஓரளவாக சிறப்பான தொடக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் ரியான் பராக் ஒரு முனையில் நினைத்து நின்ற விளையாட, மற்ற பேட்ஸ்மேன்கள் துரித ரன்களை சேகரித்தனர்.

இதன் மூலம் 19 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைந்தது. ஜெய்ஸ்வால் 45 ரன்கள், ரியான் பராக் 36 ரன்களும் குவித்தனர். பெங்களூர் அணியின் இந்த தோல்விக்குப் பிறகு சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவிக்கும் பொழுது
“கொண்டாட்டத்தினாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்ல முடியாது. மேலும் சிஎஸ்கேவை வீழ்த்தினால் மட்டும் ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. பிளே ஆப் சுற்றுகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்று காட்டமான விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதற்குக் காரணம் பெங்களூர் அணி வீரர்கள் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அளவுக்கு அதிகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது ஆர்சிபி ரசிகர்களுக்கு ரசிக்கக் கூடிய வகையில் அமைந்தாலும், மற்ற அணிகளின் ரசிகர்களுக்கு அது ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை.

இதையும் படிங்க:ஈ சாலா கப் இந்த முறையும் போச்சு.. தொடரை விட்டு வெளியேறியது ஆர்சிபிஅணி.. 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

இதில் ஒரு படி மேலே சென்று ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி சொந்த மைதானத்திலேயே சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிராக அமைதியாக இருக்கும் படி சைகையை வெளிப்படுத்தினார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் எரிச்சலை தூண்டியது. கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்த சிஎஸ்கே ரசிகர்களும் இந்த முறை ஆர்சிபி நிச்சயமாக கோப்பையை வெல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். மேலும் மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்களும் அத்துமீறி நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles