ரசிகர்களால் ஜடேஜா மிகவும் வருத்தம் அடைந்தார்.. காரணம் இதுதான்.. விளக்குகிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் வர்ணனையாளராக செயலாற்றி வரும் அம்பத்தி ராயுடு கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது அம்பத்தி ராயுடுவும், ஜடேஜாவும் வருத்தப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது அத்தொடரில் சிஎஸ்கேவின் வெற்றிகளுக்கு சிறப்பாக பங்காற்றிய அம்பத்தி ராயுடு கோப்பையை வென்றவுடன் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.

- Advertisement -

அவர் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து ஒரு முக்கிய கருத்தை பகிர்ந்து பேசியிருந்தார். கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய களம் இறங்கியவுடன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே அவரை விரைவில் அவுட்ஆகி செல்லும்படி ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார்கள். அது அப்போது பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.

- Advertisement -

ரசிகர்களின் இது போன்ற செயலால் ஜடேஜாவே ஒரு முறை வருத்தம் அடைந்து தனது சமூக வலைதளத்தில் இது பற்றி தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்ததுடன் அவரது அதிரடி ஆட்டம் அவரை அவுட்டாகச் சொன்ன ரசிகர்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்தது.

கடந்த ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு மட்டும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து மற்ற வீரர்களுக்கு ஆதரவு அளிக்காதது பெரிய வருத்தம் அளித்ததாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் அம்பத்தி ராயுடு கூறியிருந்தார். இது பற்றி அவர் விரிவாக கூறும் பொழுது
“நீங்கள் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரி அடிக்கும் போது கூட சிஎஸ்கே ரசிகர்கள் கூட்டம் அமைதியாகவே இருக்கிறது. இதை நானும் ரவீந்திர ஜடேஜாவும் கடந்த ஆண்டு பேட்டிங் செய்தபோது உணர்ந்தோம்.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் மகேந்திர சிங் தோனி ரசிகர்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் அணியின் ரசிகர்கள். இதனால் ரவீந்திர ஜடேஜா மிகவும் விரக்தி அடைந்தார். ஆனால் அந்த சமயத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை”என்று கூறி இருந்தார்.

இதையும் படிங்க:சிஎஸ்கே இல்லை.. 2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த அணிக்கே வாய்ப்பு அதிகம்.. கூறுகிறார் ஹர்பஜன் சிங்

இவரின் கருத்து தற்போது மறுக்க முடியாத உண்மையாகியுள்ளது என்றுதான் கூற வேண்டும். சென்னை ரசிகர்கள் முதலில் தோனி ரசிகர்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் அணியின் ரசிகர்கள் எடுத்துக்காட்டாக மகேந்திர சிங் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு கூச்சலிடுவார்கள். ஆனால் அதுவே மற்ற வீரர்கள் களமிறங்கும் போது எதுவுமே இருக்காது. எனவே அம்பத்தி ராயுடு கூறியது மறுக்க முடியாத உண்மை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles