தோனியால இனி அது முடியாது.. ஜடேஜா அந்த வேலைக்கு வாய்ப்பு இல்ல.. சென்னை அணிக்கு சிக்கலே இங்கதான் இருக்கு – ஆகாஷ் சோப்ரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியாக நாளை மறுதினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் பலவீனம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை இந்த ஆண்டு ஸ்பின் பந்துவீச்சை பெரிதளவில் நம்பி களம் இறங்குகிறது. லீக் சுற்றில் 7 போட்டிகள் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை கருத்தில் கொண்டு சுழற் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது போன்ற தரமான ஸ்பின்னர்களை எடுத்திருக்கிறது. மேலும் அதேபோன்று கடந்த சீசன்களில் கலக்கிய டெவான் கான்வே மற்றும் ரட்சின் ரவீந்திரா ஆகியோரும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் கடந்த ஆண்டுகளில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு முக்கிய காரணம், மேத்யூ ஹைடன், டிவெய்ன் ஸ்மித், மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா போன்ற அதிரடி வீரர்கள் ஒவ்வொரு சீசனிலும் சிஎஸ்கேவிற்கு முக்கிய பங்கு வகித்தார்கள். எனவே கடந்த முறை மற்றும் இந்த முறையும் சென்னை அணியில் அது போன்ற அதிரடி இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது “தற்போதைய சிஎஸ்கே அணியில் அதிரடியான வீரர்கள் பெரிதாக கிடையாது. அவர்களின் டாப் ஆர்டரில் டெவான் கான்வெ இருக்கிறார். அவர் ரன்கள் சேகரிக்கக் கூடிய வீரராக மட்டுமே இருக்கிறாரே தவிர, அதிரடியான வீரர் கிடையாது. மேலும் கீழ் வரிசையில் பார்க்கும்போது மகேந்திர சிங் தோனி மட்டுமே இருக்கிறார். ஆனால் அவர் 17வது ஓவருக்கு முன்பு வரப்போவது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க:ரிக்கி பாண்டிங் கொடுக்கும் நம்பிக்கை.. என்னை ஜாம்பவான் ரேஞ்சுக்கு தோன்ற வைத்துவிடுவார்.. உற்சாகமான ஸ்ரேயாஸ் ஐயர்

எனவே அந்தக் குறையை ரவீந்திர ஜடேஜாவால் போக்க முடியுமா? என்று கேட்டால் அவர் அதிரடியாக விளையாட கூடிய வீரர் கிடையாது. இப்போதைக்கு இந்த வேலையை செய்யக்கூடிய வீரராக சிவம்தூபே மட்டுமே இருக்கிறார். இதுதான் சிஎஸ்கே அணிக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். மேலும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நூர் அகமது உடனடியாக விளையாட வைக்க வேண்டிய தேவை இருக்காது. இரண்டாவது பாதியில் தான் அவர் தேவைப்படுவார்” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார். இருப்பினும் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles