இந்திய அணிக்கு புதியதாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி தற்போது செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளது. அதில் ருத்ராஜை எடுக்காததற்கான காரணம் குறித்து அஜித் அகர்க்ர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் பயிற்சி காலம் முடிவடைந்து தற்போது கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய தலைமை பயிற்சியாளர் குழு இந்திய அணியில் சில எதிர்பாராத திருப்பங்களை நிகழ்த்தி வருகிறது. எடுத்துக்காட்டாக இந்திய அணியில் துணை கேப்டனாக பதவி வகிக்கும் ஒரு வீரர் அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு வருவது வழக்கம்.
அப்படி இருக்கையில் டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவின் ஓய்விற்கும் பிறகு அவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அடுத்து நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சர்ச்சை ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, மறுமுனையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த ருத்ராஜ், அடுத்து நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அவர் மட்டுமல்லாமல் அவரோடு சேர்த்து ஜிம்பாப்வே தொடரில் சதம் விளாசிய அபிஷேக் ஷர்மாவும் இடம்பெறவில்லை. இது முன்னாள் வீரர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் அஜித் அகர்கர் மற்றும் கௌதம் கம்பீர் கூட்டணி தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தி அதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறது. இதற்கு அஜித் அகர்கர் கூறும் பொழுது “வீரர்கள் சிறப்பாக செயல்பட்டும் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை என்றால் அந்த சூழ்நிலை கடினமாக இருக்கும். இதற்கு டி20 உலக கோப்பையை ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம். அதில் ரிங்கு சிங் அதற்கு முன்பு வரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க:தோனி என் கூடவே இருந்தாரு.. சில விஷயங்கள் எனக்கு அவர்தான் சொல்லிக் கொடுத்தார் – பண்ட் பேட்டி
அவர் சிறப்பாக விளையாடிய போதும்கூட எங்களால் அவரை இந்திய அணிக்கு 15 பேர் கொண்ட அணியில் சேர்க்க முடியவில்லை. நாங்கள் 15 பேர் கொண்ட வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். அதனால் சில நல்ல வீரர்கள் விடுபடத்தான் செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் ருத்ராஜை விட கில் குறைவான செயல்பாட்டை வெளிப்படுத்திய போதிலும் அவர் எப்படி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

