ஆஸ்திரேலியாவை சைலண்ட் செய்த பவுமா.. 8வது சதத்தை விளாசி மார்க்ரம் சம்பவம்.. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின் 3வது நாள் ஆட்டத்தை ஸ்டார்க் – லயன் கூட்டணி தொடங்கியது. மிட்சல் ஸ்டாரின் அபாட அரைசதம் காரணமாக ஆஸ்திரேலியா அணி 207 ரன்களை எட்டியது.

- Advertisement -

இதனால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 282 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பேட்டிங்கிற்கு பிட்ச் சாதகமாக இருந்தாலும், கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் கூட்டணியை தென்னாப்பிரிக்கா அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதன்பின் ரிக்கல்டன் – மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

8வது சதம்

இதில் ரிக்கல்டன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக முல்டர் களமிறக்கப்பட்டார். மார்க்ரம் – முல்டன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஸ்டார்க் வேகத்தில் முல்டர் 27 ரன்களில் வெளியேறிய நிலையில், மார்க்ரம் – பவுமா கூட்டணி இணைந்தது. ஒருபக்கம் பவுமா ரன் குவிப்பை விரைவுபடுத்த, மார்க்ரம் சிறப்பாக ஆட தொடங்கினார்.

- Advertisement -

அரைசதம் கடந்து மார்க்ரம் அசத்திய நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் என்ன செய்வதென தெரியாமல் ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஆனால் மார்க்ரம் ஸ்பின்னர்களை பவுண்டரிகளாக விளாசி அசத்த, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. ஒரு பக்கம் பவுமா அரைசதம் கடந்து அசத்த, இந்த பக்கம் மார்க்ரம் தனது 8வது சதத்தை நிறைவு செய்தார்.

மார்க்ரம் பதிலடி

4வது இன்னிங்ஸில் மார்க்ரம் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். முக்கியமான போட்டிகளில் மார்க்ரம் சொதப்புவதாக வந்த விமர்சனத்திற்கு இந்த சதம் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால் 3வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்துள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

- Advertisement -

மார்க்ரம் சதம் அடித்த போது வர்ணனையில் இருந்த டி வில்லியர்ஸ் துள்ளிக் குதித்து கொண்டாடினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக சோக்கர்ஸ் என்ற பழியை தென்னாப்பிரிக்கா அணி தூக்கி எறியும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles