மும்பை அணியில் பும்ராவுக்கு இதுவரைக்கும் அந்த மேஜிக் நடக்கவே இல்ல.. 2027 ஐபிஎல்லில் நடக்க வாய்ப்பு இருக்கு- கிரிஸ் ஸ்ரீகாந்த் பேட்டி

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஹர்திக் பாண்டியா – அர்ஷ்தீப் சிங் வீரர்கள் பரிமாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பரிமாற்றத்தில் அர்ஷ்தீப் சிங்குடன் விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத்தும் மும்பை அணிக்குச் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், மும்பை அணியின் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும்போது, “இந்த வர்த்தகம் இரு அணிகளுக்குமே நல்ல முடிவாக இருக்கும். பும்ராவுக்கு புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய சரியான தொடக்கக் கூட்டாளி இல்லாமல் இருந்தது. அர்ஷ்தீப் வருகை அந்தக் குறையைப் போக்கும். அதேபோல், பஞ்சாப் அணிக்கு நடுவரிசையில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தேவை. ஹர்திக் வந்தால் அந்த அணியின் பலம் அதிகரிக்கும். இருப்பினும், இந்தப் பரிமாற்றத்தால் பஞ்சாப் அணிக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles